ARTICLE AD BOX
ஆமாம்.. நான் கோடீஸ்வரன் தான்.. உண்மையை உடைத்த கார்த்திக்.. கார்த்திகை தீபம் சீரியல்!
சென்னை: சாமுண்டீஸ்வரியின் தோழியாக வரும் ராஜேஸ்வரி ரேவதியை அறிமுகம் செய்துவைத்துவிட்டு, கார்த்திகை அழைத்து இவர் தான் என் வீட்டு டிரைவர் எனக்கூறி கார்த்தியை அறிமுகம் செய்து வைக்க ராஜேஸ்வரிக்கு இவனை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே என்று யோசிக்க ஒரு மீட்டிங்கில் கார்த்தியுடன் பங்கேற்ற விஷயம் நினைவுக்கு வருகிறது. உடனே, தனது பி.ஏவிற்கு போன் செய்து, இப்போது நான் ஒரு திருமணத்தில் இருக்கிறேன். இந்த இடத்தில் டிரைவர் ஒருவரை பார்த்தேன் அவரை ஏற்கனவே எங்கோ பார்த்தது போல நினைவு இருக்கிறது என்று சொல்லி, கார்த்திக்கின் போட்டோவை அனுப்பி விசாரிக்கிறாள். அப்போது கார்த்திக், அபிராமி க்ரூப்ஸ் கம்பேனியின் உரிமையாளர் என்றும், பெரிய பிசினஸ் மேன் என்றும், அவரின் மனைவி தீபா இறந்த பின், அவர் எங்கே போனார் என்றே தெரியவில்லை.
தற்போது அந்த கம்பேனியை கார்த்திக்கின் சகோதரர்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்ற உண்மையை பிஏ சொல்ல ராஜேஸ்வரி அதிர்ச்சி அடைகிறான். ஒரு பெரிய பிஸ்னஸ் மேன், ஏன் இங்கு டிரைவராக நடிக்க வேண்டும், நடிப்பதற்கு என்ன காரணம் என்னவாக இருக்கும், சாமுண்டீஸ்வரியிடம் இந்த விஷயத்தை சொல்லலாமா, வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கிறாள்.

கார்த்திகை தீபம்: இதையடுத்து இன்றைய எபிசோடில், ராஜேஸ்வரி கார்த்தியை தனியாக அழைத்து, நீ கார்த்திக் தானே பிசினஸ் மேன் தானே உன் கையெழுத்துக்காக அனைவரும் காத்துக்கிட்டு இருக்க நீ எங்கே டிரைவராக வேலை செய்துக்கிட்டு இருக்க, அதற்கு காரணம் என்ன என்று விசாரிக்க கார்த்திக், ஆமாம், நீங்க ராஜேஸ்வரி தானே.. உங்களை எனக்கு தெரியும் என்று சொல்கிறான். மேலும்,சாமுண்டீஸ்வரி என் அத்தை தான், எங்க குடும்பத்திற்கும் அவங்க குடும்பத்திற்கும் ஒரு பிரச்சனையாகி குடும்பம் பிரிந்து விட்டது. இரண்டு குடும்பத்தையும் ஒன்றாக சேர்ப்பதற்காகத்தான் நான் இங்க வந்திருக்கேன் என்பதையும் சொல்கிறான். இதைக்கேட்ட ராஜேஸ்வரி, நீ ஒரு நல்ல விஷயத்திற்காக இங்கே வந்து இருக்க, அது எனக்கு புரியுது. உன்னோட நல்ல மனசுக்கு எல்லாமே நல்லபடியாக நடக்கும் நான், உன்னை பற்றிய உண்மையை சொல்ல மாட்டேன் என்று சொல்கிறாள்.

சொதப்பிய மகேஷ்: அடுத்ததாக மயில்வாகனம் பாட்டி சொன்ன இலையை பறித்து வந்து கோட்டில் தேய்த்து அதை கொண்டு போய் மகேஷிடம் கொடுத்து சாமுண்டீஸ்வரி போட்டு கொண்டு மேடைக்கு வர சொன்னதாக சொல்ல மகேஷ் அந்த கோட்டை போட்டு மேடைக்கு வருகிறான். பிறகு ரேவதி மற்றும் மகேஷ் என இருவரும் மேடை ஏறி டான்ஸ் ஆட தொடங்க மகேஷ்க்கு அரிப்பு ஏற்பட்டு டான்ஸ் சுதப்புகிறான். இதைப்பார்த்த அனைவரும் மகேசை பார்த்து சிரிக்கின்றனர். பிறகு ஸ்வாதி டான்ஸ் ஆடுகிறாள். அடுத்து மயில் வாகனம் மற்றும் ரோகிணி ஆடுகின்றனர். இதையடுத்து எல்லாரும் சேர்ந்து நடனமாட சாமுண்டீஸ்வரி அங்கு வர அனைவரும் ஷாக் ஆகின்றனர்.

யாரும் எதிர்பாராத விதமாக சாமுண்டீஸ்வரியும் அவர்களுடன் சேர்ந்து நடனமாட எல்லாரும் சந்தோசப்படுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.