ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து! அரையிறுதிக்கு சென்றது ஆஸ்திரேலியா!

4 hours ago
ARTICLE AD BOX

சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. இதன்மூலம் ஆஸ்திரேலியா அரையுறுதிக்கு சென்றுள்ளது. 
 

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இன்று நடைபெற்ற ஆஸ்திரேலியா-ஆப்கானிஸ்தான் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. இதனால் ஆஸ்திரேலியே அணி 4 புள்ளிகள் பெற்று அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 273 ரன்கள் எடுத்தது.

அந்த அணி வீரர் செதிகுல்லா அடல் 95 பந்தில் 85 ரன்கள் எடுத்தார். அஸ்மதுல்லா உமர்சாய் 63 பந்தில் 67 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய தரப்பில் பென் த்வார்ஷுயிஸ் 3 விக்கெட் வீழ்த்தினார். ஆடம் ஜாம்பா 2 விக்கெட் சாய்த்தார். பின்பு பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 12.5 ஓவர்களில் 1 விக்கெட் இழந்து 109 ரன்கள் எடுத்து இருந்தது. டிராவிஸ் ஹெட் 40 பந்தில் 59 ரன்களும், கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 19 ரன்களில் களத்தில் இருந்தபோது திடீரென மழை குறுக்கிட்டது.

நீண்ட நேரம் மழை விடாமல் வெளுத்து வாங்கியது. மைதானம் முழுவதும் தண்ணீர் தேங்கியதால் இந்த ஆட்டம் கைவிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் என இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது. ஏற்கெனவே 3 புள்ளிகள் பெற்றிருந்த ஆஸ்திரேலியா இப்போது வழங்கப்பட்ட 1 புள்ளியுடன் சேர்த்து மொத்தம் 4 புள்ளிகள் பெற்று ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. ஆனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டமும், இப்போது ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டமும் மழையால் தடைபட்டுள்ளது. குருப் ஏ பிரிவில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்ட நிலையில், குருப் பி பிரிவில் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

இது தவிர தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் தலா 3 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளன. நாளை தென்னாப்பிரிக்கா அணி இங்கிலாந்துடன் மோதுகிறது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றால் எந்தவித சிக்கலும் இன்றி அரையிறுதிக்குள் நுழைந்து விடும். இப்போதைய நிலையில் தென்னாப்பிரிக்கா 2.140 என்ற நல்ல ரன் ரேட்டில் உள்ளது. ஆப்கானிஸ்தான் ரன் ரேட் -0.990 என்ற மோசமான நிலையில் உள்ளது.

அப்படி தென்னாப்பிரிக்கா இங்கிலாந்துக்கு எதிராக தோற்றாலும், 200க்கும் மேற்பட்ட ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தால் தான் அந்த அணியின் ரன் ரேட் ஆப்கானிஸ்தானுக்கு கீழாக செல்லும். இதனால் ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு செல்லும். ஆனால் இது நடக்கும் வாய்ப்பு மிக குறைவு தான்.

Read Entire Article