பல பிரச்சனைகளை குணமாகும் அதிசய பானம் இது.. என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

3 hours ago
ARTICLE AD BOX

தற்போது உள்ள காலகட்டத்தில் உடலில் எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் உடனே விளம்பரங்களில் வரும் மருந்துகளை தான் நம்பி செல்கிறோம். ஆனால் அது முற்றிலும் தவறு. முடிந்த வரை நாம் வீடுகளில் கிடைக்கும் பொருள்களை வைத்து குணப்படுத்துவது தான் சிறந்தது. குறிப்பாக செரிமான பிரச்சனைகளுக்கு பலர் கெமிக்கல் நிறைந்த கண்ட மருந்துகளை நாம் சாப்பிடுகிறோம்.

இனி அது போன்ற தவறுகளை செய்ய வேண்டாம். அதற்கு பதில், நமது வீடுகளில் இருக்கும் அஜ்வைன் போதும், பல பிரச்சனைகளை குணமாகும். இந்திய உணவுகளில் ஓமம் என்பது பொதுவான ஒன்று. நறுமணம் மிக்கது. ஆயுர்வேதத்திலும் சித்த மருத்துவத்திலும் பல பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க இந்த ஓமம் தான் பயன்படுத்தப்படுகிறது.

இந்த ஓமம் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவது மட்டும் இல்லாமல், எல்லா விதமான செரிமான பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு அளிக்கிறது. அஜ்வைனில் முக்கிய ஊட்டச்சத்துக்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் சிகிச்சை குணங்கள் அதிகம் உள்ளது. இதனால் தொற்றுநோய்கள் ஏற்படுவதை தடுக்க முடியும். வாயு பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு இது நிரந்தர தீர்வு அளிக்கும்.

மேலும், இந்த அஜ்வைன் நீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடல் எடை கட்டாயம் குறையும். இந்த அஜ்வைன் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. இதனால் மாரடைப்பு போன்ற இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்க முடியும். தொடர்ந்து சளியால் அவதிப்படுபவர்கள் அஜ்வைன் தேநீர் குடித்து வரலாம் இதனால் சளி முற்றிலும் விரைவாக குணமாகும். இது ஆரோக்கியத்துக்கு நல்லது என்றாலும், இவைகளை அதிகமாக உட்கொண்டால் வயிற்றுப்புண்கள் ஏற்படும்.

மேலும் கல்லீரல் நோய்கள் இருப்பவர்கள் இதை எடுத்துக்கொள்ளக் கூடாது. குறிப்பாக, கர்ப்பிணி பெண்கள் ஓம விதைகள் சேர்ப்பது பாதுகாப்பானது அல்ல. ஏனென்றால், இது உடலில் வெப்பத்தை அதிகரித்து, கருப்பை சுருக்கத்தை தூண்டலாம். அது மட்டும் இல்லாமல், தலைச்சுற்றல், குமட்டல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படும்.

Read more: மத்தி மீன் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா? பலருக்கு தெரியாத ரகசியம் இது..

The post பல பிரச்சனைகளை குணமாகும் அதிசய பானம் இது.. என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

Read Entire Article