ARTICLE AD BOX
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி ஆண்களை வளைத்து அவர்களிடம் கஞ்சா விற்ற இளம்பெண் சென்னையில் கைது செய்யப்பட்டு உள்ளார்.
சென்னை, பல்லாவரத்தில் 3 கிலோ கஞ்சாவுடன் வட மாநிலத்தைச் சேர்ந்த 25 வயதான இளம் பெண் கைது செய்யப்பட்டு இருக்கிறார். சென்னை, பல்லாவரத்தை அடுத்த திரிசூலம் ரயில்வே கேட் அருகே போலீசார் வழக்கம்போல் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் கையில் பை ஒன்றை வைத்துக்கொண்டு இளம் பெண் சுற்றி திரிவதை பார்த்த போலீசார், அவரை மடக்கி விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அந்தப்பெண் முன்னுக்குப்பின் முரணாக பதில் சொன்னதால், அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார், அந்த பெண் பையில் வைத்திருந்த மூன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அடுத்து போலீசார் அவர்களது பாணியில் விசாரணை செய்தபோது கைது செய்யப்பட்ட பெண் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த பாயில் சாய்ஸ். 25 வயது இளம் பெண் என்பது தெரியவந்தது.
கணவர், ஒரு பெண் குழந்தையுடன் வசித்து வரும் அவர், ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. அத்தோடு மாதத்திற்கு நான்கு முறை மட்டுமே திரிபுராவில் இருந்து 5 கிலோ கஞ்சாவை திரிபுராவில் 5000 ரூபாய்க்கு வாங்கிக் கொண்டு, ரயில் மூலம் சென்னைக்கு வந்து 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து வந்துள்ளார்.
கஞ்சா விற்பனை செய்வதற்கு இன்ஸ்டாகிராம் கணக்கு ஒன்றைத் தொடங்கி, ஆபாச புகைப்படங்களை அதில் பதிவேற்றி அதன் மூலம் நண்பர்கள் வட்டாரத்தைுவாக்கி இருக்கிறார். அவர் சென்னைக்கு கொண்டுரும் கஞ்சாவை மாணவர்களுக்கு மட்டுமின்றி, கூலி தொழிலாளர்களுக்கும் விற்பனை செய்து வந்துள்ளார். கஞ்சாவுடன் சென்னைக்கு ரயிலில் வருபவர் கஞ்சாவை விற்பனை செய்து விட்டு விமான மூலம் திரிபுரா செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.
தொடர்ச்சியாக அவர் இதை மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையில் கஞ்சாவை விற்று வந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் பல்லாவரம் போலீசார் அவரை கைது செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.