ஆபாச உள்ளடக்கம் குறித்து OTT தளங்களுக்கு கட்டுப்பாடு.. மத்திய அரசு அறிவுறுத்தல்..!!

3 days ago
ARTICLE AD BOX

சமூக வலைதளங்களில் அநாகரிகமான, ஆபாசம் நிறைந்த பதிவுகள் வெளியிடப்பட்டு வருவதை சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் பதிவுகளுக்கு கட்டுப்பாடு கொண்டுவர மத்திய அரசு அறிவுறுத்திய நிலையில் மத்திய அரசு தரப்பில் ஓடிடி தள நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளன.

யூடியூப் நிகழ்ச்சி ஒன்றில் பிரபல யூடியூபர் ரன்வீர் அல்லபாடியா, பெற்றோர் உடலுறவு குறித்து அருவருக்கத்தக்க வகையில் நகைச்சுவை செய்தார். இதுதொடர்பான வழக்கில் யூடியூப்பில் ஆபாச உள்ளடக்கங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்தது.

இந்நிலையில், ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் ஓடிடி தளங்கள் மற்றும் சுய ஒழுங்குமுறை அமைப்புகளுக்கு வழங்கிய அறிவுருத்தலில், ‘‘சட்டத்தால் தடை செய்யப்பட்ட உள்ளடக்கங்களை ஓடிடி தளங்கள் சமூக ஊடகங்களில் பரப்பக் கூடாது. பரிந்துரைக்கப்பட்ட நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். உள்ளடக்கங்களில் வயது அடிப்படையிலான வகைப்பாட்டை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

ஓடிடி தளங்களில் வெளியிடப்படும் பதிவுகளை வயது ரீதியாக பகுத்து அவைஅனைத்து வயதினரும் பார்ப்பதற்கு உகந்ததா என்பதை கவனிக்க அரசு கேட்டுக்கொண்டது. ஏ சான்றிதழ் கொண்ட பதிவுகளை வெளியிடப்படும் போது கவனம் கொள்லவும் அறிவுத்தியது. ’’ என கூறப்பட்டுள்ளது.

Read more : ’உங்கள் தனியார் பள்ளிகள் செழிப்பதற்காக எங்கள் மாணவர்களின் எதிர்காலத்தை அழிக்காதீங்க’..!! அண்ணாமலை அறிக்கை

The post ஆபாச உள்ளடக்கம் குறித்து OTT தளங்களுக்கு கட்டுப்பாடு.. மத்திய அரசு அறிவுறுத்தல்..!! appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

Read Entire Article