ARTICLE AD BOX
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் திடீரென்று ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான போட்டோக்கள் வெளியாகி உள்ளன. நேற்று இரவு ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பவன் கல்யாணுக்கு ஸ்கேன் உள்பட பல்வேறு பரிசோதனைகளை டாக்டர்கள் மேற்கொண்டுள்ளனர்.
மருத்துவ பரிசோதனைக்கு மட்டுமே நேற்று மருத்துவமனைக்கு செல்லவில்லை என்றும், திடீர் உடல் நல பிரச்சனையால் தான் அவர் மருத்துவமனை சென்று இருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். பவன் கல்யாண் நீண்ட காலமாக முதுகுவலியால் பாதிக்கப்பட்டு வருகிறார். இதற்கு அவ்வப்போது சிகிச்சைகள் எடுத்து கொள்கிறார். ஆனாலும் அவருக்கு முதுகு வலி மட்டும் இன்னும் முழுவதுமாக சரியாகவில்லை. இப்படியான சூழலில் தான் கடந்த சில நாட்களாக அவருக்கு முதுகுவலி அதிகரித்த நிலையில் அவர் மருத்துமவனைக்கு சென்று இருக்கலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
மேலும் இந்த பரிசோதனையின்போது பவன் கல்யாணை சில வாரங்கள் ஓய்வெடுக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் நாளை ஆந்திராவில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற உள்ளது. இதில் அவர் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.
Read more : 2023-24 ஆம் ஆண்டில் இந்தியாவில் 7 திட்டங்களுக்கு USAID நிதியளித்தது..!! – நிதி அமைச்சகம் அறிக்கை
The post ஆந்திர துணை முதல்வர் பவண் கல்யாண் மருத்துவமனையில் அனுமதி..!! என்ன ஆச்சு..? appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.