ARTICLE AD BOX
Patanjali Mega Food And Herbal Park: மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் நகரில் உள்ள மல்டி-மோடல் சர்வதேச சரக்கு மையம் மற்றும் விமானம் நிலையப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பதஞ்சலி மெகா ஃபுட் மற்றும் ஹெர்பல் பார்க் நேற்று (மார்ச் 9) முதல் செயல்பாட்டுக்கு வந்தது.
பதஞ்சலி மெகா ஃபுட் மற்றும் ஹெர்பல் பார்க்கிற்கு கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. இங்கு பழங்கள் மற்றும் காய்கறிகள் பதப்படுத்துதல் மிக பிரம்மாண்ட அளவில் செயல்படுத்தப்பட இருக்கிறது.
ஆரஞ்சு, சாத்துக்குடி மற்றும் எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களை பதப்படுத்துவதற்காக இந்த பதஞ்சலியின் உணவுப் பூங்கா சிறப்பாக கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் இங்கு 800 டன் பழங்கள் பதப்படுத்தப்படுகிறது. இங்கு அந்த பழங்களை சாறு பிழிவது, கூழ் ஆக்குவது போன்ற பல்வேறு பதப்படுத்தும் செயல்பாடுகள் நடைபெறும்.
Asias Largest Orange Plant #Patanjalifoods pic.twitter.com/nTPYIAtRJ3
— Patanjali Ayurved (@PypAyurved) March 9, 2025
இந்த பழங்களின் சாறு, சாறு செறிவு, கூழ், பேஸ்ட் மற்றும் ப்யூரி ஆகியவற்றை உற்பத்தி செய்ய 800 டன் பழங்களை பதப்படுத்தும். கூடுதலாக, மாம்பழம், கொய்யா, பப்பாளி, மாதுளை, ஸ்ட்ராபெரி, ஆப்பிள், பேரிக்காய், தக்காளி மற்றும் கேரட் போன்ற வெப்பமண்டல பழங்களும் பதப்படுத்தப்படும். சிட்ரஸ் பழங்கள் மட்டுமின்றி மாம்பழம், கொய்யா, பப்பாளி, மாதுளை, ஸ்ட்ராபெர்ரி, ஆப்பிள், பேரிக்காய், தக்காளி, கேரட் ஆகிய உணவுப் பொருள்களும் இங்கு பதப்படுத்தப்படுகின்றன.
மேலும் இங்கு இயற்கையான முறையில் இந்த உணவுப் பொருள்களை பதப்படுத்த நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகிறது, இங்கு எவ்விதமான செயற்கையான இரசாயனப் பொருள்கள் ஏதும் பயன்படுத்தப்படுவதில்லை.
பயன்படுத்தப்பட்ட சிட்ரஸ் பழங்களில் மீதம் இருக்கும் கழிவுகளை பயன்படுத்தி பல்வேறு வாசனை பொருள்களும் தயாரிக்கப்பட இருக்கின்றன. இந்த உணவுப் பூங்காவுக்காக பழங்கள் மற்றும் காய்கறிகள் அனைத்தும் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால், விவசாயிகளின் வருமானமும் அதிகரிக்கும்.
மேலும் படிக்க | விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் பதஞ்சலி! புதிய திட்டம் இதுதான்!
மேலும் படிக்க | பதஞ்சலி மெகா உணவு மற்றும் மூலிகை பூங்கா: 10,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ