ஆங்கிலம் தான் வளர்ச்சிக்கு உதவும்.. அப்போ தமிழ்? ரஜினிகாந்த் ஓபன் பதில்

4 days ago
ARTICLE AD BOX

ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்து சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் ஜெயிலர்.

இப்படத்தை தொடர்ந்து ரஜினி நடிப்பில் வெளியான வேட்டையன் படம் சரியான வரவேற்பை பெறவில்லை. தற்போது ரஜினி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார்.

தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் குணம் கொண்ட ரஜினிகாந்த் நிகழ்ச்சி ஒன்றில் மொழி குறித்து பேசிய விஷயம் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஓபன் பதில் 

அதில், "எந்த மொழியை நீங்கள் தவறாக பேசினாலும் அதை பெரிதாக மற்றவர்கள் எடுத்து கொள்ள மாட்டார்கள். ஆனால், ஆங்கிலத்தை தவறாக பேசினால் மட்டும் கிண்டல் செய்வார்கள்.

அதற்கு பயந்தே பலரும் ஆங்கிலம் பேசுவதில்லை. ஆங்கிலம் பேச பேசத்தான் வரும். அதனால் மாணவர்கள் கண்டிப்பாக ஆங்கில மொழியில் பேசி கொள்ள வேண்டும் அது தான் அவர்களின் எதிர்காலம். தமிழன் வளர்ந்தால் மட்டும் தான் தமிழ் வளரும்" என்று கூறியுள்ளார்.   

Read Entire Article