ஆங்கிலத்திலும் உருவாகும் டாக்ஸிக்!

3 hours ago
ARTICLE AD BOX

நடிகர் யஷ் நடிப்பில் உருவாகும் டாக்ஸிக் திரைப்படம் ஆங்கில மொழியிலும் உருவாகி வருகிறதாம்.

கேஜிஎஃப் - 2 படத்தைத் தொடர்ந்து யஷ் மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் தன் அடுத்த படத்தில் நடித்து வருகிறார்.

டாக்ஸிக் (Toxic) எனப் பெயரிட்டுள்ள இப்படம் இந்தாண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேவிஎன் புரோடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது.

இதையும் படிக்க: தமிழ் இயக்குநருடன் இணையும் யஷ்!

பெங்களூருவில் மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், திட்டமிட்டபடி படப்பிடிப்பு முடியாது என்றே தகவல் வெளியாகியுள்ளது.

காரணம், இப்படம் கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி வருகிறதாம். ஹாலிவுட் வரை படத்தை மார்க்கெட் செய்ய கேவிஎன் புரக்டக்‌ஷன்ஸ் திட்டமிட்டுள்ளதால் டாக்ஸிக் பெரிய வணிக வெற்றியைப் பதிவு செய்யலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Read Entire Article