ARTICLE AD BOX
என்னதான் சத்தான உணவு சாப்பிட்டாலும் அதை எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்பது அர்த்தம் இல்லை. சாப்பாடு சாப்பிடுவதற்கு தனியாக ஒரு பழக்கமே உள்ளது என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
“தலை தித்திப்பு கடை கைப்பு” அதாவது உணவு சாப்பிடுவதற்கு முன் எப்போதும் இனிப்பு தான் சாப்பிட வேண்டும். பின்னர் தான் குழம்பு, அவியல், துவையல் என ஒவ்வொரு உணவாக சுவைக்க வேண்டும்.
உணவு சாப்பிடும்போது முதலில் இனிப்பு சாப்பிட வேண்டும். அதாவது தேன், இனிப்பான பழங்கள், வெள்ளத்தால் செய்யப்பட்ட இனிப்பு வகைகளை சாப்பிட வேண்டும்.
அப்போது தான் நாக்கில் உமிழ்நீர் சுரந்து சாப்பிட தூண்டும் என்று டாக்டர் கூறுகிறார்.எனவே சாப்பிடும் போது முதலில் இனிப்பு பின்னர் குழம்பு, காய் என சாப்பிட்டு இறுதியாக ஜீரணத்திற்கு உதவும் மிளகு சீரகம் போட்ட ரசம் குடிக்க வேண்டும். இந்த வரிசையில் தான் உணவு எடுத்து கொள்ள வேண்டும். அப்படி உணவை முழுமையாக்கும் ரசத்தை எப்படி செய்வது என்று அறுசுவை உணவுகள் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பதாவது,
தேவையான பொருட்கள்:
மிளகு
சீரகம்
பூண்டு
தக்காளி
புளிக்கரைசல்
உப்பு
மஞ்சள் தூள்
ரசப்பொடி
பச்சை மிளகாய்
கருவேப்பிலை
சீரகம்
எண்ணெய்
கொத்தமல்லி தழை
செய்முறை
மிளகு, சீரகம், பூண்டு ஆகியவற்றை இடித்துக் கொள்ளவும். பின்னர் ஒரு பவுலில் தக்காளியை கையால் கரைத்து விடவும்.
அதில் கெட்டியாக புளிக்கரைசலையும் சேர்த்து இடித்து வைத்துள்ள மிளகு, சீரகம், பூண்டையும் சேர்த்து உப்பு, மஞ்சள் தூள், ரசப்பொடி சிறு தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும்.
Instant Rasam | #rasam #garlic #pepper #healthyfood credits dr.sivaraman
பின்னர் மேலே சிறிது பச்சை மிளகாய் நறுக்கியும் கருவேப்பிலையையும் சேர்த்து தாளித்து விட வேண்டும்.
அதற்கு ஒரு கடாயில் இந்த ரசக்கலவையை சேர்த்து மேலே சீரகத்தை எண்ணெயில் வறுத்து அதில் போடவும் நுரை பொங்கியதும் மேலே கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கவும்.
சத்தான உணவு சாப்பிடுகிறோம் என்பதையும் தாண்டி அதனை எந்த வரிசையில் எப்படி சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியமாகும் என்று சித்த மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.