ARTICLE AD BOX
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கோவை விவசாயிகள் பாராட்டு விழாவை முன்னெடுத்தனர். அந்த நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி புகைப்படம் மட்டும் இடம்பெற்ற நிலையில், அதிமுக முன்னாள் தலைவர்கள் படம் ஏதும் போஸ்டரில் இடம்பெறவில்லை.
இந்த விஷயம் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனிடம் எதிர்ப்பை தெரிவித்த நிலையில், அவர் தனது கருத்தை முன்வைத்து கூட்டத்தை புறக்கணித்தார். இதனால் செங்கோட்டையன் - எடப்பாடி பழனிசாமி இடையேயான அரசியல் பழக்கத்தில் விரிசல் ஏற்பட்டது.
இதையும் படிங்க: முற்றுகிறதா இபிஎஸ் Vs செங்கோட்டையன் மோதல்? கூட்டத்தை தவிர்த்து அதிரடி.!
மனக்கசப்பு
தற்போது தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், கே.ஏ செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமியை சந்திப்பதை தவிர்த்து வருகிறார். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவராக இருக்கும் செங்கோட்டையன், தலைவரான எடப்பாடி பழனிசாமியை நேற்றும், இன்றும் சந்திக்கவில்லை.
அதிமுக எம்.எல்.ஏ கூட்டம் நடக்கும் அவைக்கும் செல்லாமல், நேரடியாக சட்டப்பேரவைக்கு சென்று நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு புறப்படுகிறார். இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதாகவும் அரசியல் ரீதியாக கூறப்படுகிறது. அதனை சமாதானம் செய்யும் முயற்சியில் கட்சியினர் ஈடுபட்டு இருக்கின்றனர்.
சுதந்திரம் உண்டு
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியிடம் இதுதொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "எம்.எல்.ஏ கூட்டத்தை தவிர்த்து தொடர்பான கேள்வியை செங்கோட்டையனிடம் கேட்க வேண்டும். அவரவருக்கு வேலை இருக்கும் என்பதால், என்னால் அவர்கள் ஏன் வரவில்லை என கேட்க இயலாது.
நான் அதிமுகவில் சாதாரண தொண்டன். அதிமுகவில் அனைவர்க்கும் தனியாக செயல்படும் அதிகாரம் என்பது உள்ளது. திமுகவைபோல அடிமை வேலை இங்கு இல்லை. கட்சியினர் சுதந்திரமாக செயல்பட உரிமை உண்டு என்பதால், அவர்களின் நேரத்திற்கேற்ப செயல்படுவார்கள்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: #JustIN: "வருமுன் காப்பதும் இல்லை- பட்டும் திருந்துவது இல்லை" - எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்.!