அவல் ரவா இட்லி - வேர்க்கடலை சட்னி!

10 hours ago
ARTICLE AD BOX

அவல் ரவா இட்லி

தேவையான பொருட்கள்:

அவல் - 1 கப்

புளித்த தயிர் - 1 கப்

தண்ணீர் - 1 1/2 கப்

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன்

கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்

முந்திரி - 5

பெருங்காயத்தூள் - சிறிது

பச்சை மிளகாய் - 1

கருவேப்பிலை - சிறிது

கேரட் துருவியது - 5 டீஸ்பூன்

கொத்தமல்லி - சிறிது

ரவை - 1 கப்

உப்பு - தேவைக்கு

செய்முறை:

முதலில் அவல், தயிர் இரண்டையும் நன்றாக கலந்து 1/2 கப் நீர் ஊற்றி 15 நிமிடம் ஊற வைக்கவும். பின்னர் ஒரு மிக்ஸியில் போட்டு 1/2 கப் நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைக்கவும். அரைத்த அவலை ஒரு பாத்திரத்தில் ஊற்றவும். தொடர்ந்து ஒரு வாணலியில் அடுப்பில்வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானாதும் கடுகு , உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.

அதில் முந்திரி,பெருங்காயத்தூள் பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின் அதில் நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்து கிளறி விட்டு ரவையை கொட்டி இரண்டு நிமிடம் வறுத்து இறக்கவும்.

அரைத்த, அவலுடன் சேர்த்து கிளறி 1/2 கப் நீர் ஊற்றி உப்பு சேர்த்து நன்கு கலந்து விட்டு மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.

ஊறிய பின் இட்லி தட்டில் எண்ணெய் தடவி மாவை இட்லிகளாக ஊற்றி இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடம் வேகவைத்து இறக்கினால் சுவையான மெதுவான அவல் ரவா இட்லி தயார். எளிதானது சத்தானது.

வேர்க்கடலை சட்னி:

தேவையான பொருட்கள்:

காய்ந்த வேர்க்கடலை - 1 கப்

காய்ந்த மிளகாய் - 4

புளி - சிறிது

உப்பு - தேவைக்கு

பூண்டு - 5 பல்

தாளிக்க:

நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்

கடுகு - சிறிது

உளுத்தம் பருப்பு - சிறிது

காய்ந்த மிளகாய் - 2

கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வேர்க்கடலையை கருகாமல் வறுத்து ஆற வைத்து, அதில் வர மிளகாய், புளி, பூண்டு, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு நைசாக அரைக்கவும்.

அரைத்ததில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்து போட்டு கலக்கவும்.

கெட்டியான ருசியான வேர்க்கடலை சட்னி தயார்.

இட்லி, தோசை, சாதம், கஞ்சி இவற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும் செய்து பாருங்கள்.

இதையும் படியுங்கள்:
டேஸ்டி தக்காளி தொக்கு - காரசார நெல்லிக்காய் சட்னி - ரெசிபிஸ்!
aval rava idli and peanut chutney
Read Entire Article