ARTICLE AD BOX
ரஜினிகாந்த், அஜித் உள்ளிட்ட பெரிய நடிகர்களின் படங்களில் காமெடி கேரக்டரில் நடிக்க வாய்ப்பு வந்தபோதுகூட, நடிகர் சந்தானம் அதை மறுத்துவிட்டதாகவும், இனிமேல் ஹீரோவாகத்தான் தொடர்ந்து நடிப்பேன் என கூறியதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில், ஒரு குறிப்பிட்ட நடிகர் படத்தில் மட்டும் தான், எந்த காமெடி கதாபாத்திரமாக இருந்தாலும் நடிப்பேன் என்றும், ஏனெனில் அவர் தன்னுடைய காட்ஃபாதர் என்றும் சந்தானம் கூறியுள்ளார். அந்த நடிகர் சிம்பு என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் சிம்பு நடிக்கும் மூன்று படங்கள் குறித்த அறிவிப்பு, அவரது பிறந்த நாளில் வெளியாகியது. அந்த வகையில், சிம்புவின் 49-வது படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த திரைப்படத்தை ’பார்க்கிங்’ பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், சந்தானம் மீண்டும் இப்படத்தில் காமெடியனாக நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. சந்தானத்தை திரையுலகத்திற்கு கொண்டு வந்ததே சிம்பு தான் என்பதால், அவரை தனது காட்ஃபாதர் என சந்தானம் பலமுறை கூறியுள்ளார். இதனால் தான், சிம்புவின் படத்தில் மட்டும் காமெடியனாக நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.