ARTICLE AD BOX
அள்ளி கொடுக்கும் மல்டிபேக்கர் பங்கில் முதலீடு செய்ய ஆசையா?.. அப்பம் இந்த 5 விஷயங்களை பாருங்க..
பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் அனைவருமே நல்ல ஆதாயம் பெற எண்ணத்தில் முதலீடு செய்கிறார்கள். அவர்கள் சரியான மல்டிபேக்கர் பங்கில் முதலீடு செய்தால் அவர்களது செல்வம் பல மடங்கு பெருகும். உதாரணமாக 16 ஆண்டுகளுக்கு முன் டிசிபிஎல் பேக்கேஜிங் நிறுவன பங்குகளை ரூ.10 லட்சத்துக்கு வாங்கியிருந்தால் அது இன்று ரூ.20 கோடியாக உயர்ந்திருக்கும். மல்டிபேக்கர் பங்கு உங்கள் செல்வத்தை உருவாக்கும் இயந்திரமாக இருக்கும். ஆனால் மல்டிபேக்கர் பங்கை அடையாளம் காண்பது மிகவும் சவாலானது. மல்டிபேக்கர் பங்கை கண்டுபிடிப்பதற்கு என்று எந்தவொரு பார்முலாவும் கிடையாது. இருந்தாலும், ஒரு நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி உள்ளிட்ட ஐந்து விஷயங்களை கவனத்தில் நாம் ஆய்வு செய்து மல்டிபேக்கர் பங்கை தேர்வு செய்யலாம்.
வருவாய் வளர்ச்சி
ஒரு பங்கு மல்டிபேக்கர் பங்காக இருப்பதற்கான சாத்தியமான அடிப்படையே நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சிதான். பொதுவாக, கடந்த 3-5 ஆண்டுகளில் நிறுவனத்தின் கூட்டு வருடாந்திர வருவாய் வளர்ச்சி விகிதம் 15-20 சதவீதம் என்ற அளவில் இருக்க வேண்டும். வருவாய் வளர்ச்சி நிலையாக இருக்க வேண்டும். வருவாய் அதிகரித்து லாபம் தேக்கநிலையில் இருந்தால் அது அதிக செயல்பாட்டு செலவுகள் அல்லது திறமையின்மையை குறிக்கலாம். புதிய திறன்கள் ஆன்லைனில் வருவதால், தேய்மான அதிகரிப்பு தொடர்பாகவும் இது பார்க்கப்பட வேண்டும்.

கடன்/பங்கு விகிதம்
ஒரு நிறுவனத்தின் மொத்த கடனுக்கும் அதன் பங்கு மூலதனத்துக்கும் உள்ள விகிதம் கடன்/பங்கு விகிதம் ஆகும். இது நிறுவனத்தி்ன் ஆபத்து மற்றும் நிதி ஆரோக்கியத்தை பகுப்பாய்வு செய்யும் ஒரு முக்கிய அளவீடாகும். பொதுவாக இந்த விகிதம் 1க்கு குறைவாக இருந்தால் அது சிறந்தது. இந்த விகிதம் குறைவாக இருந்தால் அந்த நிறுவனம் நிதி ரீதியாக வலுவாகவும், தொழில்துறை மந்தநிலை சந்தித்தால் அப்போது இந்நிறுவனம் குறைந்த அபாயங்களை எதிர்கொள்ளும்.
பணப்புழக்கம்
எந்தவொரு நிறுவனமும் வணிகத்தை விரிவுப்படுத்தவும், கடன் குறைப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் அல்லது அதிக முதலீட்டை ஈர்க்க பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் வழங்கவும் மற்றும் பணத்தை மீண்டும் முதலீடு செய்யவும் நிறுவனத்தில் தாராள பணப்புழக்கம் இருக்க வேண்டியது மல்டிபேக்கர் பங்குக்கு முக்கிய காரணியாகும்.
பங்கு மதிப்பு
பங்குச் சந்தைக்கு புதியவர்கள், அதிக வளர்ச்சி கொண்ட பங்குகளை அதிக விலை கொடுத்து வாங்குவதால், அது குறைந்த அல்லது ஏமாற்றம் அளிக்கும் வருமானத்தை அளிக்கும். எனவே இந்த மதிப்பு விளையாட்டை புரிந்து கொள்வது புதிய முதலீட்டாளருக்கு அவசியம். இதனை புரிந்து கொள்ள விரும்பினால் அதற்கான அளவீடு பி/இ விகிதம். பங்கின் சந்தை விலைக்கும், ஒரு பங்கு வருமானத்துக்கும் உள்ள விகிதம் பி/இ விகிதம் எனப்படும். 1க்கும் குறைவான மதிப்புள்ள பங்குகள் அதன் வளர்ச்சி திறனுடன் ஒப்பிடும்போது குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது என்பதை குறிக்கிறது.
இதர நிதி விகிதங்கள்
EBITDA (EV/EBITDA) மற்றும் P/B ratio ஆகிய மேம்பட்ட அளவீடுகள், ஒரு நிறுவனத்தின் மதிப்பீட்டை அதன் சொத்துக்கள் மற்றும் வருவாய்களுடன் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒப்பி்ட்டு பார்க்க உதவுகிறது.
சிம்பதி ப்ளே
மிரே அசெட் கேபிட்டல் மார்க்கெட்ஸின் மணீஷ் ஜெயின் கூறுகையில், சிம்பதி ப்ளே என்ற ஒரு முதலீட்டாளர் உத்தி இருக்கிறது அதனை முதலீட்டாளர்கள் தவிர்க்க வேண்டும். சிம்பதி ப்ளே முதலீட்டாளர் உத்தி என்பது, ஓரே துறையை சேர்ந்த பங்காகும். அந்த துறையின் சிறந்த பங்கின் வெளிச்சம் இந்த பங்கின் மீது படும் என்ற நம்பிக்கையில் வாங்கப்படுகிறது. அதாவது ஒரு பெரிய நிறுவனம் தொடர்பான பாசிட்டிவான செய்தி அதே துறையில் உள்ள நிறுவனங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று முதலீட்டாளர்கள் நம்புகிறார்கள். அந்த நிறுவன பங்கு ஏறும்போது நாம் வாங்கும் பங்கும் ஏறும் என்ற நம்பிக்கையில் வாங்கப்படுகிறது. ஆனால் அத்தகைய நிறுவனங்களின் லாபம் பொதுவாக ஒப்பிடுகையில் மங்கி விடும். பங்குகள் இறுதியில் பெரிய நிறுவன பங்கின் அனுதாபத்தில் மேல செல்ல முயற்சிக்கும் ஆனால் அவை ஒரு போதும் நன்றாக செயல்படாது என்று தெரிவித்தார்.
Story written by: Subramanian