அற்புதமான ஆவாரம் பூ! சிறுநீரகம் முதல் புற்றுநோய் வரை! டீ போட்டு குடித்தால் போதும்!

6 hours ago
ARTICLE AD BOX

அற்புதமான ஆவாரம் பூ! சிறுநீரகம் முதல் புற்றுநோய் வரை! டீ போட்டு குடித்தால் போதும்!

Health
oi-Vishnupriya R
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆவாரம் பூவின் மருத்துவ குணங்கள் மற்றும் பயன்களை தெரிந்து கொள்ளலாம். நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த பூ அருமருந்தாக இருக்கிறது.

இதுகுறித்து ராஜன் ஹனி என்ற சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஆவாரம்பூவின் மருத்துவ குணங்கள் மற்றும் பயன்களை பார்க்கலாம். ஆவாரம்பூ பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.

health avarampoo

நீரிழிவு நோய்

ஆவாரம்பூ டீ நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

உடல் சூடு

ஆவாரம்பூ உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியை ஏற்படுத்தும்.

சிறுநீரக ஆரோக்கியம்

ஆவாரம்பூ சாறு சிறுநீரகத்தை சுத்தப்படுத்தி, சிறுநீரக கற்களைத் தடுக்க உதவுகிறது.

சரும ஆரோக்கியம்

ஆவாராம்பூ சருமத்திற்கு பொலிவையும், ஈரப்பதத்தையும் அளிக்கிறது. மேலும், சரும நோய்களை குணப்படுத்தவும் உதவுகிறது.

முடி வளர்ச்சி

ஆவாரம்பூ முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.

கண் ஆரோக்கியம்

ஆவாரம்பூ கண் பார்வைக்கு நல்லது.

மாதவிடாய் பிரச்சனைகள்

ஆவாரம்பூ மாதவிடாய் பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. ஆவாரம்பூவை டீ, சாறு, பொடி போன்ற வடிவங்களில் பயன்படுத்தலாம்.

ஆவாரம்பூவின் அனைத்து நன்மைகளையும் பெற, அதை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஆவாரம்பூவின் வேறு சில பெயர்கள்: ஆவரை, ஆவாரம், தாரை. இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆவாரம் பூ நீரிழிவு நோயாளிகளுக்கு வரக் கூடிய மூட்டு வலி, அதிக தாகம், நரம்பு தளர்ச்சி, பாத எரிச்சல், மதமதப்பு உள்ளிட்டவைகளை போக்கும்.

தோல் நோய் இருப்போர் ஆவாரம் பூவுடன் பச்சை பயிறு சேர்த்து அரைத்து தேய்த்து குளிக்கலாம். இந்த ஆவாரம் பூ மலமிளக்கியாகவும் உள்ளது. ஆவாரம்பூ பொடி, பனங்கருப்பட்டி, ஏலக்காய் தூள் சேர்த்து குடிக்கலாம்.

கொழுப்பையும் இந்த ஆவாரம் பூ குறைக்கும். எந்த பக்கவிளைவுகள் இல்லாமல் கொழுப்பை குறைக்கும் அருமருந்து. ஆவாரம் பூ மார்பக புற்றுநோய், குரல் வள புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

காய்ச்சல் அதிகமாக இருக்கும் போது அதை தணிக்க ஆவாரம் பூ வை பயன்படுத்தலாம். இந்த பூக்களை தண்ணீரில் ஊற வைத்து அந்த தண்ணீரை குடித்து வந்தால் காய்ச்சல் குறையும். அது போல் சருமத்தில் ஏற்படும் காயங்களுக்கும் நல்லது.

பொடுகு பிரச்சினை இருப்பவர்கள் ஆவாரம் பூ பொடி, வெந்தயபொடி, கற்றாழை ஆகியவற்றை சம அளவில் சேர்த்து தலையில் தடவினால் பொடுகு தொல்லை நீங்கும். அதுபோல் ஆவாரம் பூக்கள் இளநரைக்கும் தீர்வை கொடுக்கவல்லது.

ஆவாரம் பூ தேநீர் தயாரிப்பது எப்படி?

காய்ந்த ஆவாரம் பூ ஒரு கைப்பிடி அளவு

தண்ணீர் - இரு டம்பளர்

இஞ்சி ஒரு துண்டு

தேன் அல்லது நாட்டு சர்க்கரை - சிறிது

முதலில் நீரை கொதிக்க வைத்து அதில் இஞ்சியை தட்டி போடவும். பிறகு ஏலக்காய் தூள் சேர்த்து ஆவாரம் பூவையும் சேர்க்கவும். அவற்றை சில நிமிடங்கள் வரை கொதிக்கவிட வேண்டும். பிறகு வடிகட்டி , அதில் தேன் அல்லது நாட்டு சர்க்கரையை தேவைப்பட்டால் சேர்க்கலாம்.

பொறுப்பு துறப்பு: இயற்கையோடு ஒன்றி இருத்தல் நல்லதுதான். ஆனால் நம் உடல் இந்த மூலிகையை ஏற்குமா என்பதை மருத்துவரிடம் கேட்டு அவரது ஆலோசனையின் பேரில் பயன்படுத்தலாம்.

English summary
Do you know the health benefits of Avarampoo?
Read Entire Article