அர்ச்சனா சொன்ன பிளான், நந்தினிக்கு வந்த சந்தேகம், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

3 hours ago
ARTICLE AD BOX
Moondru Mudichu Serial Today Promo Update 25-02-25

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

Moondru Mudichu Serial Today Promo Update 25-02-25Moondru Mudichu Serial Today Promo Update 25-02-25

நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி கிச்சனுக்கு வந்து வீட்டுக்கு கெஸ்ட் வந்து இருக்காங்க அவங்களுக்கு என்ன வேணும்னு கேட்டு கொடுக்க மாட்டீங்களா என்று கேட்க,ரேணுகா ஏதாவது கொடுத்தீங்களா அக்கா என்று கேட்க,நந்தினி இல்லை என்ற தலை ஆட்ட, போய் என்ன வேணும்னு கேட்டு விசாரிச்சு கொடுங்க என்று சொல்ல ரேணுகா போக உடனே சுந்தரவல்லி நீ எதுக்கு போற அதை கிச்சன்ல நின்னுகிட்டு இருக்காலா அவள போய் கேக்க சொல்லு என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். பிறகு நந்தினி டீ போட்டுக் கொண்டிருக்க, ரூமில் அர்ச்சனா தூங்கிக் கொண்டிருக்கும் சூர்யாவிடம் இந்த நாளை மறக்கவே மாட்டேன் இந்த ரூம்ல நீயும் நானும் வாழ்நாள் முழுவதும் வாழப் போறோம் என்கிறதுக்கு ஒரு குட்டி ரிகர்சல் தான் இது என்று சொல்லுகிறார். உன் கூட முழுமையான ஒரு வாழ்க்கையை நான் வாழ வேண்டும். நீ முழித்திறந்தாலும் தூங்கினாலும் என்னை காந்தம் போல் இழுக்கிற என்னால் கண்ட்ரோல் பண்ண முடியல என சொல்லி சூர்யாவின் பக்கத்தில் முத்தம் கொடுக்கப் போக நந்தினி அந்த நேரம் பார்த்து வந்துவிட உடனே நெற்றியில் விபூதி வைத்துவிட்டு நந்தினியை கண்டுக்காதது போல் நீ சீக்கிரம் சரியாயிடனும்.

உனக்கு ஏதோ ஆயிடுச்சு என்று கேள்விப்பட்டதும் எனக்கு மனசு சரியில்லாம போயிடுச்சு. என்னதான் நீங்க எனக்கு இல்லனாலும் ஒரு காலத்துல நான் உன்னை ஆசைப்பட்டேன் நீ எப்பவுமே சிரிச்சு கிட்ட சந்தோஷமா இருக்கணும்.உன்னையும் உன் குடும்பத்தையும் நான் ரொம்ப காயப்படுத்திய அசிங்கப்படுத்தி இருக்கேன் அதை நினைச்சா எனக்கே வெட்கமா இருக்கு. நீ கிடைக்கலங்குற கோவத்துல தான் நான் அப்படி பண்ணிட்டேன் உன்ன பாத்து மன்னிப்பு கேட்கணும்னு தோணும் ஆனா எனக்கு கூச்சமா இருக்கும். உன்கிட்ட மட்டும் இல்ல உன் வைஃப் நந்தினி கிட்டயும் நான் ரூடா நடந்துகிட்டேன். அவதான் உன்கிட்ட இருந்து என்ன பிரிச்சுட்டானு தப்பா நினைச்சுட்ட, நந்தினி ரொம்ப பாவம் எனக்கு இருக்கிற பக்குவம் அப்போ இல்லாம போயிடுச்சு. ஆனா இப்ப சொல்றேன் நீயோ நந்தினியோ ஒரு அருமையான ஜோடி நீங்க ரெண்டு பேரும் ரொம்ப சந்தோஷமா இருக்கணும் ஆனா உன்ன மிஸ் பண்றேன் என்ற ஏக்கம் எனக்கு வாழ்நாள் முழுக்க இருக்க தான் செய்யும் ஆனா நீ சந்தோஷமா இருந்தா எனக்கு அது போதும் என்று சொல்லுகிறார்.

யாருக்கு என்ன நடக்கணுமோ அதுதான் நடக்கும் என்று சொல்லிவிட்டு நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும் என சொல்லிவிட்டு திரும்ப நந்தினி இருப்பது தெரியாதது போல் நீ என்ன நந்தினி இங்க இருக்க என்று கேட்கிறார் உடனே காபி கொடுக்க, அர்ச்சனா காபிக்கு தேங்க்ஸ் சொல்லிவிட்டு உன்னை தப்பா பேசினதுக்கு சாரி சொல்லி விட்டு சூர்யா கண்ணு முழிச்சவுடன் சொல்லிவிடு என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். சுந்தரவல்லி மாதவி சுரேகா மூவரும் உட்கார்ந்து கொண்டிருக்க, சுரேகா சுந்தரவல்லி மீண்டும் அவஇவ்வளவு தூரம் வந்திருக்கா என்றால் அது நம்ம குடும்பத்துக்கு தான் பிரச்சனை என்று சொல்ல மாதவியும் அதையே சொல்லுகிறார். ரேணுகா காபி எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க யாரும் வேண்டாம் என சொல்லுகின்றன.

அர்ச்சனா கீழ இறங்கி வர சுந்தரவல்லி பாத்திட்டியா என்று கேட்க தூங்கிகிட்டு இருக்கான் என்று சொல்ல எழுப்பி பார்த்திருக்கலாமே என்று சொல்லுகிறார்.இல்லை ஆன்டி இருக்கட்டும் சூர்யா ரெஸ்ட் எடுக்கட்டும் என்று சொல்ல சுந்தரவல்லி எல்லாத்துக்கும் காரணம் யார் இந்த மூஞ்சி தான் இவர்தான் சூர்யாவா திருத்துற சரி பண்றேன்னு எதையோ கலந்து கொடுத்து இப்படி பண்ணிட்டா என்று சொல்ல அர்ச்சனா இதுல நந்தினி மேல எந்த தப்பும் இல்ல, சூர்யாவை திருத்த அவ முயற்சி பண்ணி இருக்கா அவ்வளவு தானே என்று சொல்லிய பிறகு சுந்தரவல்லிக்கு தேங்க்ஸ் சொல்லுகிறார். சூர்யாவை பார்த்ததினால் எனக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கு என்று சொல்லிவிட்டு சுரேகா மாதவிடாய் நீங்களும் என்ன மன்னிச்சிடுங்க உங்ககிட்ட நான் ரொம்ப ரூடா நடந்துக்கிட்டேன் எல்லாருமே என்ன மன்னிச்சிடுங்க எல்லாமே என் தப்பு தான் என்று சொல்லிவிட்டு சுந்தரவல்லி இடம் கிளம்புகிறேன் என சொல்லிவிட்டு வெளியில் கிளம்பி வர நந்தினி கூடவே வந்து நீங்க வந்தது ரொம்ப சந்தோஷம் என்று சொல்ல நிஜமாவா என்று கேட்கிறார். உடனே அர்ச்சனா யோசித்து நீயும் சூர்யாவும் நீயும் ஒரு நாள் கண்டிப்பா வீட்டுக்கு விருந்துக்கு வரனும் என்று சொல்லிவிட்டு காரில் ஏற போக, பிளான் போட்டு செருப்பை கீழே விட்டு காரில் ஏற,தெரியாமல் விழுந்தது போல் நடித்து அதை நந்தினி எடுத்துக் கொடுக்க வைக்க நந்தினி கொடுத்தவுடன் நீ இந்த வீட்ல இந்த அளவுக்கு தான் இருக்க என்று மனதில் நினைத்துக் கொண்டு, உன் ஹஸ்பண்ட வந்து பார்த்ததுக்கு என்னை தப்பா நினைச்சுக்காத என்று சொல்ல அதெல்லாம் ஒன்னும் இல்ல இப்ப நீங்க வந்து பார்த்ததே ரொம்ப சந்தோஷம் என்று சொல்ல விட்டா என்னை அடிக்கடி வர சொல்லுவ போல என்று சொல்ல கண்டிப்பா வாங்க என்று சொல்லுகிறார். சரி நான் கிளம்புறேன் நந்தினி என்று சொல்லிவிட்டு அர்ச்சனா கிளம்பி விட இதையெல்லாம் மேலிருந்து சூர்யா பார்த்துவிட்டு அர்ச்சனா இதுக்கு இங்கு வந்தான் நந்தினி என்ன பேசிக்கிட்டு இருந்தா புரியலையே என்று யோசிக்கிறார்.

மறுபக்கம் மாதவி சுரேகா அசோகன் என மூவரும் ரூமில் இருக்க சுரேகா கோபமாக இவ எதுக்கு இப்ப வந்தா எதுக்கு நந்தினியை புகழ்ந்து பேசினா எல்லார்கிட்டயும் நல்லவ மாதிரி மன்னிப்பு கேட்கிறா என்று சொல்ல அசோகன் ஒருவேளை திருந்திட்டு இருப்பாளோ என்று கேட்க ,மாதவி அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை நம்ம பிராடுனா அவ நம்மள விட பத்து மடங்கு அதிகம் அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்று சொல்ல சுரேகா அவ மட்டும் திரும்பி வந்துட்டானா நம்பல பாத்திரம் கழுவ விட்டுருவா என்று சொல்ல அசோகன் மாதவியிடம் ஐடியா கேட்கிறார். அவ இங்க பிளான் இல்லாம வந்திருக்க மாட்டா என்று சொல்ல, அத விட அம்மா அவளை எந்த நம்பிக்கையில இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருப்பாங்க என்று சொல்ல அதுதான் அத்தை சொன்னாங்களே சூர்யாவுக்காக பூஜை பண்ணதா என்று சொல்ல எல்லாமே டிராமா தான் என்று சுரேகா சொன்னவுடன் இப்பதான் நீ கரெக்டா சொல்லிருக்க. அர்ச்சனா வந்தது ஒரு பிளான் என்றால் அம்மா அவளை கூட்டிட்டு வந்ததுல ஏதோ ஒரு விஷயம் இருக்கு இனி அடிக்கடி ஏதாவது நடந்து கொண்டே தான் இருக்கும் என்று சொல்ல, சுரேகா எப்படியாவது ஏதாவது பண்ணுக்கா அவளை உள்ள விடக்கூடாது அவள உள்ள விட்டோம் நம்ம கெட்டோம் என சொல்ல வெயிட் பண்ணுன்னு மாதவி சொல்லுகிறார். நந்தினி ரூமில் பெட் சரி செய்து கொண்டிருக்க சூர்யா வந்து கூப்பிடுகிறார்.

அவ எதுக்கு இங்க வந்தா அவளுக்கு இங்க என்ன வேலை என்று கேட்க யாரு சார் என்று கேட்கிறார். நான்தான் பார்த்தேனே அவகிட்ட சிரிச்சு சிரிச்சு பேசிகிட்டு இருந்தியே என்று கேட்க,அர்ச்சனா அம்மாவா என்று கேட்கிறார் அர்ச்சனா அம்மாவா அவளுக்கு எல்லாம் அவ்வளவு மரியாதையே கிடையாது என்று சொல்ல எனக்கென்னமோ அவங்க நல்லவங்களா ஆயிட்டாங்களோனு தோணுது என்று சொல்ல, அவ எதுக்கு இப்ப வந்தா என்று கேட்க உங்களுக்கு உடம்பு சரியில்லை என்று சொல்லி தெரிஞ்சு இப்ப வந்து சாமி கும்பிட்டு உங்களுக்கு விபூதி எல்லாம் வெச்சிட்டு போனாங்க என்று சொல்ல, சூர்யா கண்ணாடியை பார்த்து விபூதியை கலைத்து விடுகிறார். அவ எப்போ வந்தா என்று கோபப்பட, அவங்கள நீங்க தானே மணமேடை வரைக்கும் நிக்க வச்சு காயப்படுத்தி இருக்கீங்க உங்க மேல தான் தப்பு இருக்கு என்று சொல்ல அவளுக்கு நான் எவ்வளவோ சொல்லிட்டேன் அதை பத்தி எல்லாம் உனக்கு தெரியாது என்று சொல்ல இருந்தாலும் இப்போ நல்லவங்களா தான் இருக்காங்க என்று சொல்ல, அவ பொண்ணே இல்லன்னு சொல்ற நீ நல்லவன்னு சொல்லிக்கிட்டு இருக்க என்று சொன்ன பிறகு சரி இப்ப எனக்கு பசிக்குது ஏதாவது சமைச்சு கொடு என்று சொல்லுகிறார்.அவ்வளவுதான சார் இப்பவே நாட்டுக்கோழி இருக்கு நண்டு இருக்கு சூப் வைத்து குழம்பு வைத்து எடுத்துட்டு வரேன் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார் சூர்யா இவ வீடு வரைக்கும் வர ஆரம்பிச்சுட்டாலே என்று யோசித்துக்கொண்டு உட்காருகிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் ரேணுகாவிடம் அர்ச்சனா நம்ப அடிக்கிற ஒவ்வொரு அடியும் இடி மாதிரி இருக்கணும் என சொல்லி எதையோ ஒரு பிளான் சொல்லுகிறார்.

ரேணுகா ரூமில் இருக்க நந்தினி நீ என்ன பண்ற என்று கேட்க கூட்டிவிட வந்தேன் என்று சொல்லுகிறார். கையில வெளக்கமாறு காணும் என்று கேட்க ரேணுகா திருத்திருவென முழிக்கிறார். மறுபக்கம் சூர்யா கையில் சரக்கு பாட்டில் வைத்து சரக்கு மாதிரி தான் இருக்கு நான் ஏதாவது மனப்பிராந்தில ஒளரனா என்று பேசிக் கொண்டிருக்க நந்தினி பார்த்துக் கொண்டிருக்கிறார் என்ன நடக்கப் போகிறது என்று எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

Moondru Mudichu Serial Today Promo Update 25-02-25Moondru Mudichu Serial Today Promo Update 25-02-25

The post அர்ச்சனா சொன்ன பிளான், நந்தினிக்கு வந்த சந்தேகம், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!! appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.

Read Entire Article