ARTICLE AD BOX

அஜித் மற்றும் த்ரிஷா நடிப்பில் உருவான உருவாகி வரும் திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இந்த படம் ஏப்ரல் பத்தாம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் திரிஷா ஹீரோயினாக நடித்துள்ள நிலையில் அவருடைய கதாபாத்திரத்தின் பெயர் படகுழுவால் அறிவிக்கப்பட்டது. அதாவது ரம்யா என்ற ரோலில் த்ரிஷா நடிக்கிறாராம். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க குட்பேட் அக்லி படத்தின் டீசர் மிக விரைவில் வெளியாக உள்ளது. இன்னும் ஒரு சில நாட்களுக்குள் இந்த படத்தின் டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சில தினங்களுக்கு முன்புதான் த்ரிஷா நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் குட் பேட் அக்லி படத்தில் இருந்து ஒரு சுவாரசியமான தகவல் கிடைத்துள்ளது. அதாவது இந்த படத்தில் அஜித் நடித்துள்ள கதாபாத்திரம் குறித்து தகவல் கிடைத்துள்ளது. அதாவது அஜித் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கிறாராம். நல்லவராக ஒரு ரோலிலும், நெகட்டிவ்வாக ஒரு ரோலிலும், கெட்டவராக ஒரு ரோலிலும் நடிக்கிறார் என அந்த போஸ்டர் வெளிவந்த போதே சொல்லப்பட்டது. அந்த மூன்று கதாபாத்திரங்களில் கேங்ஸ்டர் கதாபாத்திரமும் ஒன்று என்று தற்போது தகவல் கிடைத்துள்ளது.