ARTICLE AD BOX
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது துபாயில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் லீக் ஆட்டங்களில் விளையாடிய இந்திய அணி மூன்று ஆட்டங்களிலும் வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளை வீழ்த்தி குரூப் ஏ பிரிவில் முதலிடத்தினை பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்தது.
அரையிறுதி போட்டிக்கான ஆடுகளம் இப்படித்தான் இருக்கும் : பராமரிப்பாளர் பேட்டி
அதனை தொடர்ந்து இன்று நடைபெற இருக்கும் அரையிறுதி போட்டிக்கான ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. இந்த போட்டியிலும் வெற்றி பெற்று இந்திய அணி இறுதிப் போட்டிக்கு செல்ல வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதற்காக ரசிகர்கள் சிறப்பு பிரார்த்தனையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்திய அணி துபாய் மைதானத்தில் மட்டுமே விளையாடி வருவதால் போட்டிகள் அனைத்தும் இந்திய அணிக்கு சாதகமாகவே நடைபெற்று வருகின்றன என்ற விமர்சனம் பலரது மத்தியிலும் இருந்து வருகிறது. இவ்வேளையில் இந்த விவகாரம் குறித்து பேசியிருந்த கேப்டன் ரோகித் சர்மா :
துபாய் மைதானத்தில் நான்கு, ஐந்து ஆடுகளங்கள் உள்ளதாகவும் ஒவ்வொன்றும் வித்தியாசமான தன்மையை கொண்டிருக்கும் என்பதனால் எந்த மைதானம் எப்படி இருக்கும் என்று தெரியாது என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று மதியம் நடைபெற இருக்கும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டிக்கான ஆடுகளம் கடந்த மூன்று போட்டியிலும் விளையாடிய ஆடுகளத்தை தாண்டி புதிதாக அமைக்கப்பட்டது என்றும் இந்த ஆடுகளம் மெதுவாகவும், சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாகவும் இருக்கும் என ஆடுகள கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : ஹெட்டை முடிச்சு விடுங்க ஷமி.. அந்த 2 ஆஸியையும் அடக்கிட்டா இந்தியா ஜெய்க்கும்.. ஹர்பஜன் கோரிக்கை
ஏற்கனவே இந்திய அணி விளையாடிய மூன்று லீக் ஆட்டங்களிலும் மூன்று வெவ்வேறு ஆடுகளங்கள் பயன்படுத்த வேளையில் அரையிறுதிக்கும் புதிய ஆடுகளமே தயார் படுத்தப்பட்டுள்ளது. இந்திய அணி விளையாடும் ஆடுகளங்கள் இந்திய அணிக்கே சாதகம் என்ற விமர்சனங்கள் தவிர்ப்பதற்காகவே ஒவ்வொரு போட்டியும் ஒவ்வொரு ஆடுகளங்களில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
The post அரையிறுதி போட்டிக்கான ஆடுகளம் இப்படித்தான் இருக்கும் – ஆடுகள பராமரிப்பாளர் பேட்டி appeared first on Cric Tamil.