அரிவாள் மனை- கத்தி மழுங்கியதா? வீட்டிலேயே சாணை பிடிக்க இதோ வழி; செம்ம கிச்சன் டிப்ஸ்

13 hours ago
ARTICLE AD BOX

உங்கள் வீட்டில் உள்ள அரிவாள் மனை- கத்தி மழுங்கிவிட்டதா, காய்கறிகள் ஏதையாவது நறுக்குவதற்கு சிரமமாக இருக்கிறதா, கவலைப்பட வேண்டாம் வீட்டிலேயே சாணைப்பிடிக்கலாம். உங்களுக்காக இதோ சூப்பர் கிச்சன் டிப்ஸ் தருகிறோம்.

Advertisment

வீட்டில் உள்ள அரிவாள் மனை- கத்தி மழுங்கிப் போய்விட்டால், காய்கறிகள் ஏதையாவது நறுக்குவதற்கு சிரமமாக இருக்கும். அவற்றை உடனடியாக கடைக்கு எடுத்துச் சென்று சாணைப் பிடிக்கவும் முடியாது. அதே போல, அடிக்கடி கடைகளுக்கு எடுத்துக்க்கொண்டு சென்றும் சாணைப் பிடிக்க முடியாது. அதனால், வீட்டிலேயே அரிவாள் மனை- கத்தி சாணைப் பிடிக்கலாம். புதுமை சமையல் அண்ட் கிராஃப்ட்ஸ் (puthumai samayal & crafts) யூடியூப் சேனலில் கூறப்பட்டுள்ள டிப்ஸ் மூலம் வீட்டிலேயே அரிவாள் மனை- கத்தி சாணைப் பிடிப்பது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.

வீட்டில் நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் வைத்திருக்கும், வீட்டிலேயே அரிவாள் மனை- கத்தி, கத்தரிக்கோல், அரிவாள் துருப்பிடித்து முனை மழுங்கி இருக்கும். ஹார்ட்வேர் கடைகளில் விற்கப்படும் உப்பு காகிதம் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். இப்போது அந்த உப்பு காகிதத்தில் சிறிது அளவு கிழித்து எடுத்துக்கொண்டு துருப்பிடித்த, அரிவாள் மனை, அரிவாள், கத்தியை நன்றாகத் தேய்த்து சுத்தப்படுத்திக்கொள்ளுங்கள். இப்போது கேஸ் ஸ்டவ்வைப் பற்ற வைத்து மிதமான தீயில் வைத்துக்கொள்ளுங்கள். அரிவாள் மனையை சானைப் பிடிக்க வேண்டிய பகுதியை மட்டும் 2 நிமிடம் சூடுபடுத்திக்கொள்ளுங்கள். அரிவாள் மனையை சூடுபடுத்திய பிறகு, எச்சரிக்கையாக கையை சுட்டுக்கொள்ளாமல், அரிவாள் மனையை வீட்டில் இஞ்சி பூண்டு இடிப்பதற்கு பயன்படுத்தும் சிறிய உரலைத் திருப்பி போடடு, அதில் இரண்டு பக்கமும் தேய்த்தால் அரிவாள் மனை சாணைப் பிடிப்பது போல கூர்மை அடையும். இதே போல, அரிவாளையும் சூடுபடுத்தி தேய்த்து சாணைப் பிடிக்கலாம். இப்படி சாணைப் பிடித்த பின், சூடு ஆறிய பிறகு, 2 சொட்டு தேங்காய் எண்ணெய் விட்டு தடவி வைத்துவிடுங்கள். அப்போதுதான் துருப்பிடிக்காது. இதே போல, அரிவாளையும் சூடுப்டுத்தி தேய்த்து சாணைப் பிடிக்கலாம். 

Advertisment
Advertisements

காய்கறி நறுக்கும் சிறிய கத்திகள், கத்தரிக்கோல் சானைப் பிடிக்க உப்புக்காகிதத்தால் கூர்மையாகும்படி தேய்த்தாலே போதும் கூர்மை அடையும். இப்படி, உங்கள் வீட்டிலேயே அரிவாள் மனை- கத்தி சாணைப் பிடிக்கலாம். ஆனால், எச்சரிக்கையாக கையை சுட்டுக்கொள்ளாமல் செய்ய வேண்டும்.

Read Entire Article