அரியானாவில் பயணிகள் ரயில் தடம்புரண்டது

6 hours ago
ARTICLE AD BOX

சண்டிகர்: அரியானாவில் பயணிகள் ரயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டது. இதில் பயணிகள் யாரும் காயமடையவில்லை. அரியானாவின் குருஷேத்ராவில் இருந்து டெல்லி நோக்கி பயணிகள் ரயில் சென்று கொண்டு இருந்தது. நிலோகேரி ரயில் நிலையத்தை ரயில் வந்தடைந்தது.

பின்னர் அங்கிருந்து ரயில் சுமார் 100 மீட்டர் சென்றபோது ரயிலின் 4வது பெட்டியின் சக்கரம் தண்டவாளத்தை விட்டு விலகியது. எனினும் உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தொழில்நுட்பக்குழுவின் விசாரணைக்கு பின்னரே விபத்துக்கான காரணம் தெரியவரும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post அரியானாவில் பயணிகள் ரயில் தடம்புரண்டது appeared first on Dinakaran.

Read Entire Article