அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் – பரிசீலிக்க அமைச்சர்கள் குழு அமைப்பு

2 days ago
ARTICLE AD BOX

புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு, பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை உடனடியாக வழங்கிட வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கும், உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், உடற்கல்வி இயக்குனர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ அமைப்பு வருகிற 25-ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க அமைச்சர்கள் அடங்கிய குழுவை அமைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று  ( பிப்.23 ) உத்தரவிட்டுள்ளார். இக்குழுவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இக்குழு நாளை தலைமைச் செயலகத்தில் அரசு அலுவலர்கள் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

The post அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் – பரிசீலிக்க அமைச்சர்கள் குழு அமைப்பு appeared first on Rockfort Times.

Read Entire Article