அரசாணையை பின்பற்றி 24 மணி நேரமும் டீக்கடை நடத்தலாம்: ஐகோர்ட் கிளை உத்தரவு

3 hours ago
ARTICLE AD BOX

மதுரை: கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையைச் சேர்ந்த பஷீர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘களியக்காவிளை பஸ் நிலையம் எதிரில் 25 வருடங்களாக டீக்கடை நடத்தி வருகிறேன். உணவு பாதுகாப்புத்துறையிடம் முறையான உரிமம் பெற்று உள்ளேன். எந்த இடையூறுமின்றி டீக்கடையை நடத்தி வருகிறேன். இரவு 11 மணிக்கு மேல் டீக்கடைகள், உணவகங்கள் செயல்படக்கூடாது என குமரி எஸ்பி உத்தரவிட்டுள்ளார். இதனால் நானும், என் கடையில் பணியாற்றும் ஊழியர்களும் கடும் சிரமத்துக்கு ஆளாகிறாம். எங்களை போல ஏராளமான வணிகர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

என்னுடைய டீக்கடையை 24 மணிநேரமும் நடத்த அனுமதிக்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், ‘‘மனுதாரரின் கடையை குறிப்பிட்ட நேரத்துக்குள் மூட வேண்டும் என கட்டாயப்படுத்துவது ஏற்புடையதல்ல. அரசாணையை பின்பற்றி மனுதாரர் 24 மணிநேரம் கடையை நடத்த அனுமதிக்கப்படுகிறார். சம்பந்தப்பட்ட போலீசார், மனுதாரரின் வியாபாரத்தில் தலையிடக்கூடாது. சட்டம்-ஒழுங்கு பிரச்னையில் மட்டுமே குறுக்கிடலாம்’’ என உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தார்.

The post அரசாணையை பின்பற்றி 24 மணி நேரமும் டீக்கடை நடத்தலாம்: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article