ARTICLE AD BOX
அய்யனார் துணை சீரியல் பிப்ரவரி 25 எபிசோட் : போலீஸிடம் தஞ்சம் புகுந்த நிலாவை, வீட்டிற்கு அழைத்துச் செல்ல, அவளின் தந்தை படுபயங்கர முயற்சி எடுக்கும் நிலையில், எழிலை தனியாக அழைத்துச் சென்ற கான்ஸ்டபிள், ‘அந்த பொண்ணு எதுக்கு உன் கூட வந்தா’ என்று கேட்கிறார். ‘அந்த பொண்ணுக்கு மாப்பிள்ளை பிடிக்கல.. அதான் ஓடி வந்திருச்சுனு’ சொல்கிறான் சோழன். ‘அவனை பிடிக்கல ஓகே.. உன் கூட ஏன் ஓடி வரணும்?’ என்று கான்ஸ்டபிள் கேட்க, ‘அந்த பொண்ணுக்கு என் மேல அவ்வளவு நம்பிக்கை சார்’ என்று சோழன் சொல்கிறான். இருவருக்கும் காதல் என மீண்டும் கான்ஸ்டபிள் தவறாக புரிந்து கொள்கிறார். ‘நீங்க அந்த மாப்பிள்ளையிடம் ஒரு முறை பேசிபாருங்க, அந்த பொண்ணு எடுத்த முடிவு சரிதான்னு நீங்களே சொல்லுவீங்க’ என்று சோழன் சொல்கிறான்.
அய்யனார் துணை சீரியல் : நிலாவை சமரசம் செய்ய முயற்சி
அந்த நேரத்தில் மீண்டும் போலீஸ் ஸ்டேஷன் உள்ளே வரும் மாப்பிள்ளை, நிலாவையும் சோழனையும் இணைத்து தப்பாக பேசுகிறான். அதைக் கேட்ட நிலா, போலீஸ் ஃபைலை தூக்கி, மாப்பிள்ளை மீது எரிகிறார். அதைப்பார்க்கும் எஸ்.ஐ., ‘ஏன்ம்மா நீயுமா’ என்று நொந்து கொள்கிறார். இறுதியாக, ‘இந்த பொண்ணை அழைத்து தனியா பேசிப்பாருங்க’ என்று நிலாவின் அப்பாவுக்கு ஒரு ஆஃபர் தருகிறார். அதற்கும் மறுக்கும் நிலாவின் அப்பா, ‘எனக்கு போலீஸ் உயர் அதிகாரிகளை தெரியும்’ என்று போலீஸ்காரர்களை மிரட்டுகிறார். நடைமுறை சிக்கலை போலீஸ் சொன்னதும், மகளுடன் தனிமையில் பேசுகிறார் நிலாவின் அப்பா.
தனிமையில் பேசும் அப்பாவிடம், ‘தான் ஓடி வரவில்லை.. கல்யாணம் பிடிக்காமல் தான் வந்தேன்’ என்று கூறுகிறாள். ஆனால், அவள் சொல்ல வருவதை முழுவதும் புரிந்துகொள்ளாமல், வழக்கம் போல தவறான புரிதலில் பேசுகிறார் அப்பா. ‘அப்போ ஏன், என்னைப் பார்த்ததும் அவன் கையை பிடித்துக் கொண்டு ஓடினாய்?’ என்று அப்பா கேட்க, ‘அப்பா.. நான் பேசுவதை கேளுங்க.. நான் கல்யாணம் பிடிக்கவில்லை என்று தான் வந்தேன்.. சோழனை விரும்பவில்லை’ என்று நிலா கூறுவதை முழுவதுமாக நம்பத் தயாராக இல்லை, அவளது அப்பாவும் , அண்ணனும்.
அய்யனார் துணை சீரியல் : சோழனை எச்சரிக்கும் போலீஸ்
இந்த பேச்சு வார்த்தை முடியும் முன்பே, கரடி போல உள்ளே வருகிறார் மாப்பிள்ளை. உடனே நிலாவின் அண்ணன் தாஸ், மாப்பிள்ளையை வெளியே அழைத்துச் செல்லப்ப, மறுபுறம் நடந்தவற்றை எஸ்.ஐ.,யிடம் சொல்லி முடிக்கிறான் சோழன். எல்லாம் சரி, பொண்ணு மட்டும் அவங்க அப்பா கூட போயிடுச்சு, பொண்ண கடத்துன கேஸ்ல உன்னை உள்ள போட வேண்டியிருக்கும் என்று எதார்த்தத்தை சோழனிடம் கூறுகிறார் எஸ்.ஐ.
மறுபுறம் மகளிடம் நடக்கும் பேச்சுவார்த்தையில், ‘நீங்கள் கல்யாணத்தை நிறுத்துவதாக கூறுங்கள், நான் உங்களுடன் வருகிறேன்’ என்று கூறுகிறாள் நிலா. ‘என்னை ஏமாற்ற நினைக்காதே, நீ அந்த சோழனோடு சேர்ந்து, என்னை அவமானப்படுத்த நினைக்கிறாய்’ என்று மீண்டும் மீண்டும் தவறான புரிதலோடு பேசுகிறார் நிலாவின் அப்பா. விசாரணை முடிந்து தனியாக அமர்ந்து, தண்ணீர் குடிக்கும் சோழனிடம் வரும் மாப்பிள்ளை சூர்யா, ‘டேய் நாளைக்கு கல்யாணம் நடக்கும்.. கல்யாணம் முடிந்ததும் இருக்குடா உனக்கு..’ என்று அடிக்க ஓங்குகிறான். ‘டேய்.. உனக்கு நிலா கிடைக்க விடமாட்டேன்டா..’ என்று பதிலுக்கு சோழனும் எகிறுகிறான்.
அய்யனார் துணை சீரியல் : ஒரே போடு போட்ட நிலா
இறுதியில் மகளுடன் பேச்சு வார்த்தை தோல்வி அடைய, ‘என் மகளை நான் அழைத்துச் செல்கிறேன்’ என்று திமிராக பேசுகிறார் நிலாவின் அப்பா. ‘நீ என்னம்மா சொல்ற’ என்று எஸ்.ஐ., கேட்க, ‘கல்யாணத்தை நிறுத்துனா, நான் அவங்க கூட போறேன்’ என்று கறாராக கூறுகிறார். இதைக் கேட்டு மாப்பிள்ளை சூர்யா கொதிக்கிறான். தனக்கு நிறைய கனவுகள் இருப்பதாகவும், அதற்கு படிக்க வேண்டும் என்றும் போலீசிடம கூறுகிறாள் நிலா.
‘இந்த ஆளு கூட 10 நிமிசம் கூட உட்கார்ந்து பேச முடியாது சார்.. அப்புறம் எப்படி சார் கல்யாணம் பண்றது? நானும் உட்கார்ந்து பேசிப் பார்த்துட்டேன்.. நான் போக மாட்டேன்.. இந்த கல்யாணம் நடக்காது’ என்று நிலா கூற, அவளை நோக்கி மாப்பிள்ளை சூர்யா அடிக்க வருகிறான். உடனே அவனை சோழன் மறித்து அடிக்க வர, நிலாவின் அப்பா எழுந்து சோழனை அடிக்கிறார்.

டாபிக்ஸ்