ARTICLE AD BOX
அம்மாவுக்கும் மகளுக்கும் ஒரே புருஷன்.. 2 பேரும் கர்ப்பமா இருக்காங்க.. சந்தோஷ வீடியோ!
சென்னை: உலகத்தில் பல நேரங்களில் பல விஷயங்கள் நமக்கே ஆச்சரியத்தைக் கொடுக்கும், ஆனாலும் அவற்றை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். அப்படியான ஒரு சம்பவம்தான் வெளிநாட்டில் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் நமக்கு மட்டும் இல்லாமல், வெளிநாட்டில் உள்ளவர்களுக்குமே, அதிர்ச்சியை கொடுத்துள்ளது. காரணம் நடந்த சம்பவம் அப்படி.
அதாவது, அம்மாவும் மகளும் ஒரே ஆணைத் திருமணம் செய்து கொண்டுள்ளனர். மேலும் இவர்கள் மூவரும் இணைந்து வாழ்ந்து வருகிறார்கள். அதே நேரத்தில் அம்மாவும் மகளும் தற்போது கர்ப்பமாக இருக்கிறார்கள். இந்த தகவல் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? ஆனால் இதுதான் உண்மை. அதாவது மகளும் அம்மாவும் ஒரே ஆணைத் திருமணம் செய்து கொண்டு, ஒரே வீட்டில் ரொம்பவும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
நிக் யார்டி மிகவும் பிரபலமான யூடியூபராக அமெரிக்காவில் அறியப்படுகிறார். இவர் பிறந்தது ஜமைக்கா என்றாலும் இவர் தற்போது உள்ளது அமெரிக்காவில்தான். இவரது யூடியூப் வீடியோக்களுக்கு ரசிகர்கள் மில்லியன் கணக்கில் உள்ளார்கள். இவரது யூடியூப் பக்கத்தை மட்டும் சுமார் 3.5 மில்லியன் ரசிகர்கள் சப்ஸ்கிரைப் செய்து வைத்துள்ளார்கள். நிக் யார்டி கடந்த 2017ஆம் ஆண்டு கஞ்சா வழக்கில் ஒரு ஆண்டு சிறைக்குச் சென்று வந்த பின்னர் தனது யூடியூப் சேனலைத் தொடங்கி இப்போது பிரபலமாக மாறியுள்ளார்.

அம்மா&மகள்: இவர் தனது யூடியூப் சேனலுக்காக டானி மற்றும் அவரது மகள் ஜேட் ஆகியோரைச் சந்தித்துள்ளார். அதன் பின்னர் இவர்கள் மூவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டு நன்றாக பழகி வந்துள்ளார்கள். ஒரு கட்டத்தில் மூவரும் இணைந்து வாழ முடிவெடுத்து உள்ளார்கள். அதன்படி 29 வயதான நிக் யார்டி, 44 வயதான டானி மற்றும் 22 வயதான ஜேட் என இருவருடனும் இணைந்து வாழ முடிவெடுத்தார். அதற்கு அவர்கள் இருவரும் சம்மதம் தெரிவிக்க, தற்போது மூவரும் ஒரே வீட்டில் ஒரே குடித்தனமாக உள்ளார்கள். இது மட்டும் இல்லாமல் தற்போது டானி மற்றும் ஜேட் என இருவரும் கர்ப்பமாக உள்ளார்கள் என்பதுதான் ஹைலைட்டான விஷயமாக உள்ளது.
கமெண்ட்ஸ்: இவர்கள் பற்றிய விஷயம் தற்போது இணையம் வழியே உலகம் முழுவதும் பரவி வருகிறது. மேலும் அவர்களின் உறவு முறையைக் கேள்வி பட்டவர்கள் சிலர் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். மேலும் சிலர் இப்படியான விஷயங்களை சகஜம் ஆக்கிவிடாதீர்கள் எனவும் கூறி வருகிறார்கள். இணையத்தில் இவர்களுக்காக அவர்களின் ரசிகர்கள் அடித்துக் கொண்டாலும், அம்மா மற்றும் மகள் என இருவருடனும் செம ஜாலியாக வாழ்ந்து வருகிறார் நிக்.
வீடியோ: மேலும் இது தொடர்பாக 22 வயதான ஜேட் கூறும்போது, நாங்கள் மகிழ்ச்சியாக உள்ளோம். எனது அம்மாவும் நானும் ஒரே ஆணைத் திருமணம் செய்து கொள்வோம், நாங்கள் இருவரும் ஒரே நேரத்தில் கர்ப்பமாக இருப்போம் என நினைத்துக் கூட பார்க்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். அதேபோல், டானி கூறும்போது, நானும் எனது மகளும் நிக்கின் குழந்தைகளை சுமந்து கொண்டு உள்ளோம். விரைவில் நாங்கள் இருவரும் குழந்தைகளைப் பெற்றெடுப்போம். சந்தோஷமாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார். மேலும் மூவரும் தாங்கள் பிரபலமாக வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி செய்தோம் எனவும் தெரிவித்துள்ளதால், இவர்கள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.