“அம்மா, அந்த தாத்தா என்னோட டிரெஸ்ஸை கழட்டி……” 7 வயது சிறுமிக்கு, பூசாரி செய்த காரியம்..

3 hours ago
ARTICLE AD BOX

புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் 28 வயதான அனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த 2014ம் ஆண்டு இவருக்கு திருமணமான நிலையில், தற்போது இவருக்கு 7 வயதான மகள் உள்ளார். இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த சில ஆண்டுகளாக தனியாக வசித்து வருகிறார். மேலும், இவர் வருமானத்திற்காக புரசைவாக்கம் பகுதியில் உள்ள நகைக்கடையில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 16ம் தேதி, வழக்கம் போல் அனிதா, தனது மகளை புளியந்தோப்பு பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். இதையடுத்து, அவரது 7 வயது மகள் பாட்டி வீட்டில் விளையாடியுள்ளார். அப்போது, எதிர்வீட்டில் வசித்து வரும் சேகர் என்பவர், “எங்க வீட்டுக்கு வா, டிவி பார்க்கலாம்” என்று சிறுமியை அழைத்துள்ளார். இதனால் சிறுமியும் ஆசையாக சேகரின் வீட்டிற்க்கு சென்றுள்ளார்.

ஆனால் அங்கு சேகர், சிறுமியின் ஆடைகளை கழற்றி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அது மட்டும் இல்லாமல், நடந்த சம்பவம் குறித்து வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என சிறுமியை மிரட்டியுள்ளார். இந்நிலையில், கடந்த 2 நாட்களாக சிறுமி சோர்வாக இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த தாய், தனது மகளிடம் என்ன நடந்தது என்று விசாரித்துள்ளார். அப்போது சிறுமி, தனக்கு நடந்த சம்பவத்தை அழுது கொண்டே கூறியுள்ளார்.

இதனால் அதிர்ந்துப் போன அனிதா, உடனடியாக சேகர் வீட்டுக்கு சென்று, இதுகுறித்து கேட்டுள்ளார். அப்போது, சேகர் நான் தவறு செய்து விட்டேன், என்னை மன்னித்துவிடு. இதை பெரிதுபடுத்தி விடாதே என்று கூறியுள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த அனிதா, அக்கம் பக்கத்தினர் உடன் சேர்ந்து சேகருக்கு தர்ம அடி கொடுத்துள்ளார். இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் இது தொடர்பாக புளியந்தோப்பு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புளியந்தோப்பு போலீசார், சேகரை புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் நடத்திய விசாரணையில், 56 வயதான சேகர், புளியந்தோப்பு பிரகாஷ் ராவ் காலனியில் வசித்து வருவதாக கூறியுள்ளார். மேலும், திருமணமாகாமல் இருக்கும் இவர், ஐயப்பன் கோயிலில் பூசாரியாக வேலை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, சேகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பொதுமக்கள் தாக்கியதில் பலத்த காயம் அடைந்த சேகருக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Read more: அதிர்ச்சி மேல் அதிர்ச்சி..!! நாம் தமிழர் கட்சியில் இருந்து அதிரடியாக விலகினார் பாவேந்தன்..!! தவிக்கும் சீமான்..!!

The post “அம்மா, அந்த தாத்தா என்னோட டிரெஸ்ஸை கழட்டி……” 7 வயது சிறுமிக்கு, பூசாரி செய்த காரியம்.. appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

Read Entire Article