ARTICLE AD BOX
வாஷிங்டன்,
அமெரிக்காவின் மத்திய, தென் மாகாணங்களை சூறாவளி தாக்கியது. அந்நாட்டின் மிசோரி, மிசிசிபி, அலபாமா உள்ளிட்ட மாகாணங்களை சூறாவளி தாக்கியது.
பலத்த காற்றுடன் சூறாவளி வீசியதால் மரங்கள் வேறோடு சரிந்தன. வீடுகள், வணிக வளாகங்கள் உள்பட பல்வேறு கட்டிடங்களின் மேற்கூரை சூறாவளியில் தூக்கி வீசப்பட்டது. பல வீடுகள் சூறாவளியில் முழுமையாக சேதமடைந்தது.
இந்நிலையில், அமெரிக்காவை தாக்கிய சூறாவளியில் சிக்கி 32 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். சூறாவளியால் அதிக பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது.
Related Tags :