அமெரிக்காவில் எச்-1பி விசா வைத்திருப்போருக்கு ஆபத்தா? அடுத்தடுத்து சம்பவம்.. NRI-கள் அச்சம்..!

1 day ago
ARTICLE AD BOX
  செய்திகள்

அமெரிக்காவில் எச்-1பி விசா வைத்திருப்போருக்கு ஆபத்தா? அடுத்தடுத்து சம்பவம்.. NRI-கள் அச்சம்..!

News

டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு ஏற்கனவே கிரீன் கார்டு மற்றும் குடியுரிமை விதிகளில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ள நிலையில், கிரீன் கார்டு வைத்துள்ளவர்கள் கூட அமெரிக்காவில் இருந்து எப்போது வேண்டுமானாலும் வெளியேற்றப்படலாம் என நிலைப்பாட்டை காட்டிய நிலையில் தற்போது ஹெச்1பி விசாவில் இருக்கும் மக்களும் இந்த இக்கட்டான நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்பதை டிரம்ப் அரசு 2 சம்பவங்கள் மூலம் அமெரிக்காவில் இருக்கும் என்ஆர்ஐ-களுக்கும் பிற வெளிநாட்டவர்களுக்கு அச்சத்தை காட்டியுள்ளது.

முதல் சம்பவம்: அமெரிக்காவில் பிரவுன் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணராகவும், பேராசிரியராகவும் பணியாற்றிய டாக்டர் ராஷா அலாவியே, எதிர்பாராத விதமாக நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட சம்பவம், எச்-1பி விசா வைத்திருப்போரின் பாதுகாப்பு குறித்து பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் எச்-1பி விசா வைத்திருப்போருக்கு ஆபத்தா? அடுத்தடுத்து சம்பவம்.. NRI-கள் அச்சம்..!

லெபனான் நாட்டைச் சேர்ந்த டாக்டர் அலாவியே, சட்டப்பூர்வமான எச்-1பி விசா வைத்திருந்தும், நீதிமன்றத்தின் தற்காலிக தடை உத்தரவைப் பெற்றிருந்தும் நாடு கடத்தப்பட்டு உள்ளார். தனது சொந்த நாட்டிற்கு குடும்பத்தினரைப் பார்க்கச் சென்றுவிட்டு பாஸ்டன் லோகன் சர்வதேச விமான நிலையத்திற்கு திரும்பிய டாக்டர் அலாவியே, வந்திறங்கியவுடன் கைது செய்யப்பட்டார். 36 மணி நேரம் காவலில் வைக்கப்பட்ட அவர், பின்னர் பாரிஸுக்கு விமானத்தில் அனுப்பப்பட்டார்.

நீதிமன்ற உத்தரவை மீறி, அமெரிக்க கஸ்டம்ஸ் மற்றும் பார்டர் பாதுகாப்பு அமைப்பு இந்த நடவடிக்கையை எடுத்திருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. நாடு கடத்துவதற்கு 48 மணி நேரத்திற்கு முன் அறிவிக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை மீறியதற்கு அமெரிக்க கஸ்டம்ஸ் மற்றும் பார்டர் பாதுகாப்பு அமைப்பு இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

இந்த நிகழ்வுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, டாக்டர் அலாவியே மற்றும் அவரது உறவினர் யாரா செஹாப்பின் சட்ட ஆலோசகர்கள், உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் கிறிஸ்டி நோயம் மற்றும் வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ உள்ளிட்ட ட்ரம்ப் நிர்வாகத்தின் முக்கிய நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர்.

டாக்டர் அலாவியேவின் நாடு கடத்தல், எச்-1பி விசா வைத்திருப்பவர்களுக்கும் அமெரிக்காவில் ஆபத்து உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இரண்டாவது சம்பவம்: கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இந்திய முனைவர் பட்ட மாணவி ரஞ்சனி ஸ்ரீனிவாசன், எஃப்-1 மாணவர் விசா ரத்து செய்யப்பட்டதால் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அமெரிக்க அரசாங்கத்தால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட ஹமாஸுக்கு அவர் ஆதரவளித்ததாக உள்நாட்டு பாதுகாப்புத் துறை குற்றம் சாட்டியது.

மார்ச் 5 ஆம் தேதி அவரது விசா அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, மார்ச் 11 ஆம் தேதி அமெரிக்க கஸ்டம்ஸ் மற்றும் பார்டர் பாதுகாப்பு அமைப்பின் ஹோம் ஆப் என்ற புதிய செயலியை பயன்படுத்தி ரஞ்சனி ஸ்ரீனிவாசன் தானாகவே அமெரிக்காவை விட்டு வெளியேற்றப்பட்டார்.

இந்த 2 சம்பவங்களும், அமெரிக்காவில் இருக்கும் வெளிநாட்டு குடிமக்கள், மாணவர்கள் மற்றும் வல்லுநர்கள் உட்பட அனைத்து தரப்பினரையும் நாடு கடத்தப்படுவோமா என்ற அச்சம் எழுந்துள்ளது. மேலும் டிரம்ப் நிர்வாகம் முதலில் முறையற்ற வகையில் அமெரிக்காவுக்கு வந்தவர்கள் மீது தான் நாடுகடத்தல் நடவடிக்கை எடுத்து வந்தது. தற்போது F1 விசா, ஹெச்1பி விசா வைத்துள்ளவர்களையும் பல்வேறு காரணத்திற்காக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

Read Entire Article