ARTICLE AD BOX

‘அமரன்’ படத்துக்காக சிவகார்த்திகேயன் உடலமைப்பை மாற்றியமைத்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வெளியான படம் ‘அமரன்’. இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை புரிந்தது. சமீபத்தில் தான் இதன் 100-வது நாள் விழா பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது.
தற்போது ‘அமரன்’ படத்தின் கதாபாத்திரத்துக்காக சிவகார்த்திகேயன் தனது உடலமைப்பை முழுமையாக மாற்றினார். இந்த வீடியோ பதிவை இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள். எப்படி இருந்த தனது உடல் அமைப்பை, எப்படி மாற்றினார் மற்றும் சிவகார்த்திகேயன் பட்ட கஷ்டங்கள் உள்ளிட்டவை இதில் அடங்கியிருக்கிறது. மேலும், இதில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, சிவகார்த்திகேயனின் ஜிம் ட்ரெய்னர் ஆகியோர் பேசியிருக்கிறார்கள்.
இந்த வீடியோ பதிவு இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. பலரும் இந்தக் கஷ்டத்துக்கு கிடைத்தது தான் மாபெரும் வெற்றி என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.