ARTICLE AD BOX
கன்னடத் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் புனித் ராஜ்குமார். 2021-ம் ஆண்டு காலமானார். அப்பு என்று செல்லமாக அழைக்கப்படும் அவர், ரசிகர்கள் மீதான அன்புக்கும், கண்ணியத்துக்கும் ரசிகர்களால் மிகவும் நேசிக்கப்பட்டவர். இந்த நிலையில், கன்னட நடிகர் ராம் குமாரின் மகன் தீரன் ஆர் ராஜ்குமார், நடிகர் புனித் குமாரின் அரியப் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ``2009-ம் ஆண்டு பெங்களூரில் நடந்த 3 இடியட்ஸ் படப்பிடிப்பின் போது எனது மாமாவும் அமீர் கானும் இருக்கும் அரியப் புகைப்படம்." எனப் பதிவிட்டிருக்கிறார்.
இந்தப் பதிவுக்குக் கீழே ரசிகர்கள் ``புனித் அண்ணா இன்னும் இறக்கவில்லை" என இந்தப் புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.
இந்தியில் ராஞ்சோ கதாபாத்திரத்தில் அமீர் கான், மாதவன், ஷர்மான் ஜோஷி ஆகியோர் நடிப்பில் வெளியான 3 இடியட் திரைப்படம், தமிழில் இயக்குநர் சங்கர் தயாரிப்பில், நடிகர் விஜய், ஶ்ரீகாந்த், ஜீவா, இலியானா, சத்தியராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது. 3 இடியட் படத்தின் படப்பிடிப்பின் போது அமீர்கானும், புனித் ராஜ்குமாரும் சந்தித்துக் கொண்ட புகைப்படம்தான் இது. இந்தப் படத்தின் கன்னட ரீமேக் திட்டமிடப்பட்டது. அதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகர் புனித் ராஜ்குமார் நடிக்கவிருப்பதாகக் கூறப்பட்டது. கே.ஆர்.ஜி ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயாரிக்க தயாராக இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Ravi Mohan: `எது பண்ணாலும்..' -ரசிகர்களுக்கு நடிகர் ரவி மோகன் கொடுத்த அட்வைஸ்