அப்பா தவெக.. மகன் பாமக!. ஜி.கே.வேலுமணி திருமணத்தில் ஜேசன் சஞ்சய்!.. என்னப்பா நடக்குது!..

2 hours ago
ARTICLE AD BOX

Jason Sanjay: தளபதி விஜயின் மகனும், இயக்குனருமான ஜேசன் சஞ்சய் முதல்முறையாக பொது நிகழ்ச்சியுடன் கலந்து கொண்ட தகவல் தற்போது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவரான ஜிகே மணி அவர்களின் இல்ல திருமண விழாவின் வரவேற்பு நிகழ்வு இன்று மாலை 6:00 மணிக்கு சேலம் மாவட்டத்தில் நடக்க இருக்கிறது. இதில் கலந்து கொள்ள முதலமைச்சர். மு க ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் சேலம் வருகை புரிந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் வந்த அதே மாதத்தில் விஜய்யின் மகனும், இயக்குனருமான ஜேசன் சஞ்சய் பயணம் செய்திருக்கிறார். நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவர் வந்திருக்கும் வீடியோக்களும் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அரசியல் கட்சியை தொடங்கியிருக்கும் விஜய் தமிழக வெற்றிக்கழகம் சார்பாக மகனை அனுப்பி இருப்பாரோ என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் வெளியாகும் முதல் படத்தை நிறுவனம்தான் தயாரிக்க இருக்கிறது.

 

அந்த நிறுவனத்தின் முக்கிய நிர்வாக அதிகாரியாக இருப்பவர் ஜிகே மணியின் மகன் தமிழ் குமரன். இவர் அழைப்பின் பேரில் தான் ஜேசன் சஞ்சய் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

முதல்முறையாக பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் ஜேசன் சஞ்சய் தற்போது பார்க்க அச்ச அசலாக ஆரம்பகால தளபதி விஜயை போல இருக்கும் புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.

விரைவில் ஜேசன் சஞ்சய் இயக்க இருக்கும் படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க இருக்கிறது. இப்படத்தில் ஹீரோவாக சந்தீப் கிஷன் நடிக்க தமன் படத்திற்கு இசையமைக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Read Entire Article