குட் பேட் அக்லி ஒதுங்கிப் போ!.. தனுஷ் ரசிகர்களுக்கு இதெல்லாம் தேவையா?!..

3 hours ago
ARTICLE AD BOX

Good Bad Ugly: சமூகவலைத்தளங்கள் வந்தபின் ஒரு நடிகரின் ரசிகர்கள் அந்த நடிகரின் போட்டி நடிகரின் ரசிகர்களுடன் சண்டை போடுவது என்பது தொடர் கதையாகிவிட்டது. எம்.ஜி.ஆர் - சிவாஜி ரசிகர்கள், ரஜினி - கமல் ரசிகர்கள் சண்டை போட்டு ஓய்ந்த பின் இப்போது விஜய் - அஜித் ரசிகர்கள் சண்டை போட்டு வருகிறார்கள்.

விஜய் - அஜித் சண்டை: டிவிட்டரில் அசிங்கமான ஹேஷ்டேக்களை வைத்து டிரெண்டிங் செய்யும் விஜய் - அஜித் ரசிகர்களுக்கு இடையேயான மோதல் பல வருடங்களாக நடந்து வருகிறது. ஜெயிலர் பட விழாவில் ரஜினி சொன்ன கழுகு - காக்கா கதையில் காக்கா என அவர் சொன்னது விஜயை என எடுத்துக்கொண்ட விஜய் ரசிகர்கள் ரஜினியை மிகவும் மோசமாக விமர்சிக்க துவங்கினர்.


ரஜினி - விஜய் மோதல்: ரஜினியின் வேட்டையன் படம் வெளியானபோது படம் வெளியான முதல்நாளே வேட்டையன் ஃபிளாப் என ஹேஷ்டேக் போட்டு டிரெண்டிங் செய்து அந்த படத்தை காலி செய்தார்கள். அதன்பின் சூர்யாவையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. கங்குவா படம் வெளியானபோது அப்படத்தை மோசமாக விமர்சித்து கமெண்ட் போட்டார்கள்.

இட்லி கடை ரிலீஸ்: இப்போது தனுஷ் ரசிகர்களுக்கும் அஜித் ரசிகர்களுக்கும் மோதல் எழுந்திருக்கிறது. தனுஷ் இயக்கி நடித்துள்ள திரைப்படம் இட்லி கடை. இந்த படம் ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் என சொல்லப்படுகிறது. அதேபோல், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி படமும் ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் என செய்திகள் உலா வருகிறது.

குட் பேட் அக்லிக்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் கண்டிப்பாக இட்லி கடை படத்திற்கு அதிக தியேட்டர் கிடைக்காது. ஏனெனில், தியேட்டர்கள் அதிபர்கள் குட் பேட் அக்லி படத்தையே திரையிட ஆசைப்படுவார்கள். தமிழகத்தில் உள்ள 1500 தியேட்டர்களில் எப்படியும் ஆயிரம் தியேட்டர் குட் பேட் அக்லிக்கு போய்விடும். இது தனுஷ் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்த குட் பேட் அக்லி படத்திற்கு எதிராக பேச துவங்கியுள்ளனர்.


விடாமுயற்சி படத்தின் ரிசல்ட்டை சொல்லி ‘இத வச்சிக்கிட்டுதான் அஜித்தை பாக்ஸ் ஆபிஸ் கிங்னு சொன்னீங்களாடா?’ என அஜித் ரசிகர்களை வம்புக்கு இழுத்துள்ளனர். மேலும், ‘குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வை.. இட்லி கடை படத்துக்கு வழிவிடு’ என்கிற ரீதியில் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

குட் பேட் அக்லி ஹைப்: குட் பேட் அக்லி படத்தில் அஜித் ரசிகர்களுக்கு என்ன தேவையோ அது கண்டிப்பாக இருக்கும். பக்கா மாஸ் ஆக்சன் படமாக இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் உருவாக்கியிருக்கிறார். இந்த படம் அஜித் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டா இருக்கும் என அவர் ஓப்பனாகவே சொல்லிவிட்டார். இதுதான் தனுஷ் ரசிகர்களை கோபப்படுத்தியிருக்கிறது. குட் பேட் அக்லி ஏப்ரல் 10ம் தேதி வெளியாகுமா இல்லை அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதிக்கு தள்ளிப்போகுமா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.

Read Entire Article