ARTICLE AD BOX
ஏஆர் ரஹ்மான் மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு வீடு திரும்பினார்; அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை
செய்தி முன்னோட்டம்
ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் வழக்கமான மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியுள்ளார்.
முன்னதாக நெஞ்சுவலி காரணமாக அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
நெஞ்சு வலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான தகவல்கள் தவறானவை என்று அவரது குழுவினர் தெளிவுபடுத்தினர்.
ஏஆர் ரஹ்மான், பயணத்தின் காரணமாக ஏற்பட்ட நீரிழப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள சென்னை அப்பல்லோ மருத்துவமனை, அவர் மருத்துவ சோதனைக்கு பிறகு வீடு திரும்பினார் என தெரிவித்துள்ளது.
முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரிப்பு
முன்னதாக, ஏஆர் ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் வெளியான உடன், மருத்துவர்களிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
இதையடுத்து அவர் நலமாக இருப்பதாகவும் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
ரஹ்மானுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களிடம் பேசியதாகவும், அவர்கள் ரஹ்மானின் உடல்நிலை சீராக இருப்பதை உறுதி செய்ததாகவும் முதல்வர் ஸ்டாலின் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார்.
இதற்கிடையே, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும், இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் விரைவில் குணமடைய தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#JUSTIN | இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு வீடு திரும்பினார் - அப்போலோ மருத்துவமனை அறிக்கை#SunNews | #ARRahman | #Apollo pic.twitter.com/cQx94aJMoO
— Sun News (@sunnewstamil) March 16, 2025