ARTICLE AD BOX
கடந்தாண்டு ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் பங்கேற்று விளையாடியது. 2021 பார்டர் கவாஸ்கர் தொடரில் ஹீரோவாக ஜொலித்த ரிஷப் பண்ட், 2024-ல் ஜொலிக்க தவறினார்.
இந்த சூழலில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் போது, இந்திய அணிக்கு ஒரு நீண்டநேர பார்ட்னர்ஷிப் தேவைப்பட்டது. ஆனால் அந்தநேரத்தில் ரிஷப் பண்ட் அவருடைய எப்போதும் போலான ஸ்கூப் ஷாட் விளையாடி தோல்விகண்டார். 2 முறை அந்த ஷாட்டிற்கு சென்று தவறவிட்ட பண்ட், 3வது முறையும் விளையாட சென்று கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
அப்போது கமெண்டரி செஸ்ஸனில் இருந்த சுனில் கவாஸ்கர், முட்டாள், முட்டாள், முட்டாள் என மூன்றுமுறை அழுத்தமாக கூறி கடுமையாக சாடினார். அது அப்போது வைரலானது.
இந்நிலையில் தற்போது சுனில் கவாஸ்கர் திட்டியதை அவரைபோலவே மிமிக்ரி செய்து பதிவிட்டுள்ளார் ரிஷப் பண்ட்.
Stupid, stupid, stupid!
அப்போது வர்ணனைபெட்டியில் இருந்த கவாஸ்கர், முட்டாள், முட்டாள், முட்டாள் என மூன்றுமுறை அழுத்தமாக கூறி, “முந்தைய பந்தில் அந்த ஷாட்டை தவறவிட்டீர்கள், அதற்காகவே ஆஸ்திரேலியா இரண்டு ஃபீல்டர்களை அங்கு நிறுத்தியது. ஆனால் அதன்பிறகும் நீங்கள் அந்த ஷாட்டை விளையாடினீர்கள், இதுபோலான ஆட்டத்தை ஆடும் இடத்தில் இந்தியா இல்லை. அணியின் சூழ்நிலையையும் புரிந்துகொள்ள வேண்டும், இது உங்களுடைய இயல்பான ஆட்டம் இல்லை. நீங்கள் உங்களுடைய விக்கெட்டை கிஃப்ட்டாக கொடுத்துள்ளீர்கள். முட்டாள்தனமான ஷாட்டை விளையாடினீர்கள், நீங்கள் இந்திய டிரெஸ்ஸிங் அறைக்கு செல்லாமல், வேறு எங்காவது செல்லுங்கள்” என்று கடுமையாக சாடினார்.
அந்த வீடியோ வைரலான நிலையில், தற்போது கவாஸ்கர் கமெண்டரி செஸ்ஸனில் பேசியது போலவே மிமிக்ரி செய்து இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார் ரிஷப் பண்ட். பண்ட்டின் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.