அப்படி போடு.. அமெரிக்காவின் அஸ்திவாரத்தையே ஆட்ட போகும் ஒரு இந்தியர்.. FBI தலைவரான காஸ் பட்டேல்

3 days ago
ARTICLE AD BOX

அப்படி போடு.. அமெரிக்காவின் அஸ்திவாரத்தையே ஆட்ட போகும் ஒரு இந்தியர்.. FBI தலைவரான காஸ் பட்டேல்

Chennai
oi-Shyamsundar I
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய வம்சாவளியை சேர்ந்த காஷ்யப் காஸ் பட்டேலை அமெரிக்காவின் எப்ஃபிஐ தலைவராக அதிபர் டிரம்ப் அறிவித்து உள்ளார். இதற்கான செனட் வாக்கெடுப்பில் அவர் வென்று.. தலைவராக பதவி ஏற்றுள்ளார். அவருக்கு ஆதரவாக 51 வாக்குகளும், அவரை உறுதிப்படுத்துவதற்கு எதிராக 49 வாக்குகளும் கிடைத்தன.

இவரை நியமிக்க கூடாது என்று அமெரிக்காவின் பல்வேறு டாப் தலைவர்கள் எச்சரித்து வந்தனர். அமெரிக்க வரலாற்றிலேயே ஒரு FBI தலைவரை நியமிக்க இவ்வளவு எதிர்ப்பு வந்ததே இல்லை. FBI அமைப்பின் பல உறுப்பினர்கள் காஸ் பட்டேலை கடுமையாக எதிர்த்து வந்தனர். அங்கே டிரம்ப் இந்தியர்களை நாடு கடத்தி வரும் நிலையில்.. இன்னொரு பக்கம் காஸ் பட்டேலை பார்த்து அமெரிக்காவின் பல தலைகள் அஞ்சி நடுங்கி வருகின்றனர்.

usa america new york

இவர் FBI தலைவராக நியமிக்கப்பட்டால் FBI அமைப்பின் பல்வேறு பொறுப்புகளில் இருந்து கூண்டோடு ராஜினாமா செய்வோம் என்று FBI அதிகாரிகள் பலர் தெரிவித்துள்ளனர்.

கடந்த முறை டொனால்ட் ஆட்சியில் அவருக்கும் எஃப்பிஐ தலைவருக்கும் இடையே கருத்து வேறுபாடு மோதல்கள் நிலவி வந்தன. அந்த மோதல்களை சரி செய்யும் விதமாக இந்த முறை தனக்கு நெருக்கமான.. இந்திய வம்சாவளியை சேர்ந்த காஷ்யப் காஸ் பட்டேலை அந்த பதவிக்கு கொண்டு வந்துள்ளார்.

ஆனால் இதை FBI அதிகாரிகள் பலர் விரும்பவில்லை. இந்த அதிகாரிகள் பலர் FBI பொறுப்பிற்கு பிடன் ஆட்சிக்காலத்தில் வந்தவர்கள். இவர்கள் காஷ் பட்டேல் வந்தால் அதனால் பாதிப்பை சந்திக்க நேரிடும். இதன் காரணமாகவே FBI தலைவராக காஷ் பட்டேல் வரக்கூடாது என்று கூறி வருகின்றனர்.

காஷ் பட்டேல்:

குஜராத் பின்புலத்தை சேர்ந்த காஷ்யப் காஸ் பட்டேல் நியூயார்க்கில் பிறந்து வளர்ந்தவர். அமெரிக்காவில் பல அரசு ரீதியான பணிகளை செய்துள்ளார். முக்கியமாக வழக்கறிஞரான இவர்.. பல அரசு தொடர்பான வழக்குகளில் வாதாடி உள்ளார். இவர் டிரம்பிற்கு மிகவும் நெருக்கம்.சமீபத்தில் அமெரிக்காவை உலுக்கிய எப்ஸ்டீன் லிஸ்ட்டை முழுமையாக வெளியிடும் திட்டத்தில் இவர் இருப்பதாக கூறப்படுகிறது.

முழுமையாக அந்த லிஸ்டை வெளியிட வேண்டும் என்று எப்ஃபிஐ அமைப்பை கோரிக்கை வைத்து வந்தார். இப்போது அவரே அதன் தலைவராகும் நிலையில் விரைவில் அந்த லிஸ்டை முழுமையாக வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவரை அதிகாரிகள் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

அமெரிக்காவில் ஏற்கனவே அரைகுறையாக வெளியான எப்ஸ்டீன் லிஸ்ட் அந்த நாட்டையே உலுக்கி உள்ளது. சினிமா நட்சத்திரங்கள் உட்பட பல பிரபலங்கள் இந்த "பலான லிஸ்டில்" சிக்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அது என்ன எப்ஸ்டீன் லிஸ்ட்? அந்த நாட்டையே இந்த லிஸ்ட் உலுக்க என்ன காரணம்?

எப்ஸ்டீன் லிஸ்ட்: ஜெஃப்ரி எட்வர்ட் எப்ஸ்டீன் லிஸ்ட்: ஜெஃப்ரி எட்வர்ட் எப்ஸ்டீன் அமெரிக்காவை சேர்ந்த பிஸ்னஸ் மேன். விர்ஜின் தீவில் இவர் சில நிதி நிர்வாகம் தொடர்பான நிறுவனங்களை நடத்தி வந்தார். அந்த நாட்டு நீதிமன்றத்தால் பாலியல் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டவர் . எப்ஸ்டீன் விர்ஜின் தீவில் தனக்கு என்று தனியாக ஒரு தீவு வாங்கி.. அங்கே பெரிய மாளிகை கட்டி.. அதில் பல பெண்கள் மற்றும் குழந்தைகளை பலாத்காரம் செய்துள்ளார். அதேபோல் பல பிரபலங்கள், நடிகர்கள், அரசியல் தலைவர்களை இங்கே அழைத்து வந்து அவர்களுக்கு "சேவைகளை" வழங்கி உள்ளார். முக்கியமாக சிறுமிகளை சப்ளை செய்துள்ளார்.

யார் இவர்?: இதற்காக அவர் ஒரு "கல்ட்" குழுவை உருவாக்கியதோடு.. கிளப் போல இதை நடத்தி அடிக்கடி அங்கே பிரபலங்களை வரவழைத்து சிறுமிகளை சித்திரவதை செய்துள்ளார்.

இதை பல ஆண்டுகளாக இவர் எந்த பிரச்சனையும் இன்றி செய்து வந்துள்ளார். இந்த நிலையில்தான் 2005 ஆம் ஆண்டில், புளோரிடாவின் பாம் பீச்சில் உள்ள போலீசார், எப்ஸ்டீனை கைது செய்தனர் . தனது 14 வயது மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பெற்றோர் தெரிவித்த புகார் ஒன்றை அடுத்து, அவரை விசாரிக்கத் தொடங்கினர்.

லிஸ்ட்: எப்ஸ்டீன் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் 14 வயதுக்குட்பட்ட முப்பத்தாறு சிறுமிகளை ஃபெடரல் அதிகாரிகள் அடையாளம் கண்டுபிடித்தனர். இந்த வழக்கில் கோர்ட் விசாரணையின் போது எப்ஸ்டீன் குற்றத்தை ஒப்புக்கொண்டார் மற்றும் 2008 ஆம் ஆண்டில் புளோரிடா மாநில நீதிமன்றத்தால் இவர் குற்றவாளி என்றும் அறிவிக்கப்பட்டார். ஆனால் இந்த வழக்கில் இரண்டு குற்றங்களுக்காக மட்டுமே அவர் தண்டிக்கப்பட்டார். கிட்டத்தட்ட பதின்மூன்று மாதங்கள் காவலில் இருந்தார். அதன்பின் விடுதலையும் ஆனார்.

அதன்பின் புளோரிடா மற்றும் நியூயார்க்கில் சிறார்களை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக எப்ஸ்டீன் மீண்டும் ஜூலை 6, 2019 அன்று கைது செய்யப்பட்டார். அவர் ஆகஸ்ட் 10, 2019 அன்று அவரது சிறை அறையிலேயே மர்மமாக இறந்தார். அவரது மரணத்திற்கு காரணம் தூக்குப்போட்டு தற்கொலை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் எப்ஸ்டீனின் வழக்கறிஞர்கள் இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும்.. மரணத்திற்கான உண்மையான காரணம் விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

என்ன நடந்தது?: இவரின் இருந்த "கஸ்டமர்கள்" லிஸ்ட்தான் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது. அதன் இரண்டாவது லிஸ்ட் தற்போது நியூயார்க் கோர்ட்டில் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் வெளியான எப்ஸ்டீன் லிஸ்ட் அந்த நாட்டையே உலுக்கி உள்ளது. சினிமா நட்சத்திரங்கள் உட்பட பல பிரபலங்கள் இந்த "பலான லிஸ்டில்" சிக்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்க முன்னாள் அதிபர்கள் டொனால்ட் டிரம்ப், பில் கிளிண்டன், அமெரிக்க முன்னாள் முதல் பெண்மணி ஹிலாரி கிளிண்டன், பிரபல இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங், ஹாலிவுட் நட்சத்திரம் லியோனார்டோ டிகாப்ரியோ, மைக்கேல் ஜாக்சன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பிரபலங்களின் பெயர்கள் இந்த லிஸ்டில் இடம்பெற்றுள்ளது.

கிரேட் பிரிட்டனின் ராணி இரண்டாம் எலிசபெத்தின் இரண்டாவது மகன் இளவரசர் ஆண்ட்ரூ
பில் கிளிண்டன், முன்னாள் அமெரிக்க அதிபர்
டொனால்ட் டிரம்ப், முன்னாள் அமெரிக்க அதிபர்
ஹிலாரி கிளிண்டன், பில் கிளிண்டனின் முன்னாள் முதல் பெண்மணி
டேவிட் காப்பர்ஃபீல்ட், அமெரிக்க பிரபலம்
ஆலன் டெர்ஷோவிட்ஸ், வழக்கறிஞர்
டைட்டானிக் படத்தில் நடித்து பிரபலமானவர் லியோனார்டோ டிகாப்ரியோ
அல் கோர், முன்னாள் அமெரிக்க துணை ஜனாதிபதி
ஸ்டீபன் ஹாக்கிங், புகழ்பெற்ற தத்துவார்த்த இயற்பியலாளர்
எஹுட் பராக், முன்னாள் இஸ்ரேலிய பிரதமர்
"கிங் ஆஃப் பாப்" என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற இசைக்கலைஞர் மைக்கேல் ஜாக்சன்.
மார்வின் மிங்க்சி, செயற்கை நுண்ணறிவு முன்னோடி
கெவின் ஸ்பேசி, அமெரிக்க நடிகர்
ஜார்ஜ் லூகாஸ், அமெரிக்க திரைப்பட இயக்குனர்
கேட் பிளான்செட், ஆஸ்திரேலிய நடிகர்
நவோமி காம்ப்பெல், பிரிட்டிஷ் மாடல்
ஷரோன் சர்ச்சர், பிரிட்டிஷ் பத்திரிகையாளர்
புரூஸ் வில்லிஸ், ஓய்வுபெற்ற அமெரிக்க நடிகர்
பில் ரிச்சர்ட்சன், நியூ மெக்சிகோவின் முன்னாள் கவர்னர்
கேமரூன் டயஸ், அமெரிக்க நடிகை
க்ளென் டுபின், அமெரிக்க முதலீட்டாளர்
நோம் சாம்ஸ்கி, மொழியியலாளர் மற்றும் அரசியல் தத்துவவாதி
டாம் பிரிட்ஸ்கர், அமெரிக்க அதிபர்
கிறிஸ் டக்கர், அமெரிக்க நகைச்சுவை நடிகர் மற்றும் நடிகர்
சாரா பெர்குசன், யார்க்கின் டச்சஸ், இளவரசர் ஆண்ட்ரூவின் முன்னாள் மனைவி
ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியர், அமெரிக்க அரசியல்வாதி

உள்ளிட்ட பலர் இந்த லிஸ்டி சிக்கி உள்ளனர். பிளாக்மெயில் செய்ய வேண்டும், எதிர்காலத்தில் உதவும் போன்ற குற்ற நோக்கங்களுக்காக இந்த பிரபலங்கள் மேற்கொள்ளும் பாலியல் செயல்பாடுகளை பதிவு செய்ய எப்ஸ்டீன் தனது தீவு முழுக்க பல இடங்களில் மறைக்கப்பட்ட கேமராக்களை பயன்படுத்தி வந்துள்ளார். .இந்த வீடியோ ரெக்கார்டர்களும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

இதை எல்லாம் எப்ஃபிஐ தலைவராக காஷ் பட்டேல் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. இதுதான் அமெரிக்காவை உலுக்கி உள்ளது.

More From
Prev
Next
English summary
Senate confirms the appoitment of Kash Patel as FBI Director of USA
Read Entire Article