ARTICLE AD BOX
அமெரிக்காவில் நடைபெற்ற 6-வது உலகக்கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தின் சென்னையைச் சேர்ந்த காசிமா 3 பிரிவுகளில் தங்கம் வென்று சாதனை படைத்தார். சர்வதேச கேரம் போட்டியில் தமிழகத்திற்கு பெருமை சேர்த்த கல்லூரி மாணவி காசிமா அமெரிக்கா செல்ல தனது பயணச்செலவிற்கு தமிழக அரசிடம் நிதி உதவி பெற்று சென்றிருந்தார். இந்நிலையில், சாதனை மாணவி காசிமாவிற்கு பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு புதுமை தமிழச்சி எனும் விருதை வழங்கி கவுரவித்தார்.
அபுதாபியில் நடைபெற்ற புதுமை தமிழச்சி பெண்கள் இயக்கம் சார்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இந்திய தூதர்கள் கலந்து கொண்டு சாதனை மகளிர் பலருக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தனர். இதில் மகளிர் தனிநபர், மகளிர் இரட்டையர் மற்றும் மகளிர் குழு பிரிவு என 3 பிரிவுகளில் தங்கம் வென்று சாதனை படைத்த தமிழக மாணவி காசிமா புதுமை தமிழச்சி விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை