அன்பில் மகேஷ் நல்லா கேட்டுக்கோ, இந்த பந்தா காட்டுற வேலை எங்கிட்ட வேண்டாம்… அண்ணாமலை ஆவேசம்…!!!

4 days ago
ARTICLE AD BOX

கரூரில் நடைபெற்ற பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அன்பில் மகேஷ் நல்லா காது கொடுத்து கேட்டுக்கோ, இதே ஊரில் 20 வயது வரை கழிப்பறையை நான் பார்த்தது கிடையாது. அப்படிப்பட்ட ஒரு குடும்பத்தில் வளர்ந்தவன் நான். தினமும் பள்ளிக்கு போகும்போது ஆட்டுப் புலக்கையை அள்ளிக் கொட்டிட்டு, மாட்டு சாணத்தை அள்ளி வீசிட்டு, ஆடுகளை எல்லாம் ஓட்டி விட்டுட்டு பிறகு சைக்கிளை அழுத்திக்கொண்டு பஸ்ஸ்டாண்டில் போய் நிறுத்திட்டு பேருந்தில் சென்று பள்ளிக்கு போய் படித்தவன் நான்.

என்னிடம் எல்லாம் இந்த பந்தா காட்டும் வேலையை வைத்துக் கொள்ள வேண்டாம். கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதை உணர்ந்தவன் நான். அவ்வளவு பெரிய பிரதமர் மோடி என்னை கை கொடுத்து மதிக்கிறார் என்றால் அதற்கு காரணம் என்னுடைய கல்வி மட்டும் தான். அந்த கல்வி சாதாரண மக்களுடைய பிள்ளைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் இப்படி போராடிக் கொண்டிருக்கின்றோம். இவர்களுக்கு எந்த கவலையும் கிடையாது. ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி, உதயநிதிக்கு பிறகு இன்பநிதி என அனைவரும் அப்படியே கடந்து கொண்டிருப்பார்கள்.

மூன்றாவது மொழியாக பிடித்த மொழியை படிக்கலாம் என்று தான் மோடி சொல்கின்றார். அவர் எப்போது இந்தியை திணித்தார். தமிழகம் வந்தால் ஆங்கிலத்தில் பேசும் அவர் நம்மிடம் ஏன் இந்தியை திணிக்க போகின்றார். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் சொந்த ஊரில் மாணவர்கள் அரச மரத்தடியில் படிக்கிறார்கள். ஆனால் அவருடைய மகன் தனியார் பள்ளியில் பிரஞ்சு படித்துக் கொண்டிருக்கிறார். திமுக காரர்கள் நடத்தும் பள்ளியில் மூன்று மொழி, ஆனால் மக்களின் குழந்தைகளுக்கு மட்டும் இரண்டு மொழி. இது எந்த விதத்தில் நியாயம் என அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

Read Entire Article