அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்த விருத்திமான் சஹா!

2 hours ago
ARTICLE AD BOX

அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் விருத்திமான் சஹா அறிவித்துள்ளார்.

இந்திய வீரரான விருத்திமான் சஹா, 141 முதல் தர போட்டிகளில் விளையாடி 7,169 ரன்கள் குவித்துள்ளார். அதில் 14 சதங்கள் மற்றும் 44 அரைசதங்கள் அடங்கும். அவரது சராசரி 48.68 ஆக உள்ளது.

40 வயதாகும் விருத்திமான் சஹா இந்திய அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். 40 டெஸ்ட் போட்டிகளில் அவர் 1,353 ரன்கள் குவித்துள்ளார். அவர் கடைசியாக கடந்த 2021 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணிக்காக விளையாடியிருந்தார்.

இதையும் படிக்க: ஆஸ்திரேலியா அபாரம்: முதல் முறையாக முழுமையாக வெல்லப்பட்ட மகளிர் ஆஷஸ் தொடர்!

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான மெகா ஏலத்தில் விருத்திமான் சஹா பங்கேற்காத போதிலும், கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் அவர் தொடர்ச்சியாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு குஜராத் டைட்டான்ஸ் அணிக்காக அவர் விளையாடினார். அந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது. இத்தனை ஆண்டுகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளுக்காக சஹா விளையாடியுள்ளார்.

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு

ரஞ்சி கோப்பை போட்டிகள் நடந்து கொண்டிருக்கையில், அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக விருத்திமான் சஹா அறிவித்துள்ளார்.

Thank You, Cricket. Thank You everyone. pic.twitter.com/eSKyGQht4R

— Wriddhiman Saha (@Wriddhipops) February 1, 2025

இது தொடர்பாக அவரது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: எனது சிறப்பான கிரிக்கெட் பயணத்தில், இந்த சீசன் எனது கடைசி சீசனாக இருக்கும். ஓய்வு பெறுவதற்கு முன்பாக ரஞ்சி போட்டியில் மட்டும் விளையாடியுள்ளேன். இறுதியாக பெங்கால் அணிக்காக விளையாடுவதை கௌரவமாக கருதுகிறேன். இந்த சீசனை நினைவில் வைத்துக் கொள்ளக் கூடிய சீசனாக மாற்ற நினைக்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.

Read Entire Article