ARTICLE AD BOX
அந்தப் பாடலுக்கு மட்டும் ஆறு மாதங்கள்.. ஓபனாக பேசிய ஜிவி பிரகாஷ்.. இப்படி வேற நடந்திருக்கா?
சென்னை: இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் அக்கா மகன் ஜிவி பிரகாஷ். ஆரம்பத்தில் இப்படி அவர் அடையாளப்பட்டாலும் தற்போது சிறந்த இசையமைப்பாளர், நல்ல நடிகர் என்ற அடையாளத்தோடு இருக்கிறார். அவரது பாடல்கள் பலரது ஃபேவரைட்டாக திகழ்ந்துகொண்டிருக்கின்றன. அவரது நடிப்பில் உருவாகியிருக்கும் கிங்ஸ்டன் திரைப்படம் வெளியாகும் சூழலில் அவர் கொடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் திடீரென ட்ரெண்டாகியுள்ளது.
வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி. பிரகாஷ். 17 வயதில் அந்த படத்துக்கு அவர் இசையமைத்தார். வெயில் படம் வெயிட்டேஜான கதை என்பதால் அந்தப் படத்தில் ஜிவி பிரகாஷின் இசையை கேட்ட ஒட்டுமொத்த திரையுலகமும், இந்த சிறிய வயதில் இப்படிப்பட்ட ஒரு படத்துக்கு சிறப்பாக இசையமைக்க தனித்திறமை வேண்டும் என அவரை உச்சி முகர்ந்து கொண்டாடியது.

முன்னணி இசையமைப்பாளர்: வெயில் படம் கொடுத்த வெற்றியால் ஜிவி பிரகாஷுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. அந்தவகையில் ரஜினி நடித்த குசேலன் படத்திற்கு இசையமைத்ததன் மூலம் மேற்கொண்டு அடையாளப்பட்டார். இவர் ஏ.ஆர்.ரஹ்மானின் அக்கா மகன் என்று குறிப்பிடத்தக்கது. ஆனாலும், அந்த பிரபல்யத்தை விட ஜிவி பிரகாஷ் சிறந்த இசையமைப்பாளர் என்ற பிரபல்யம் அவரிடன் விரைவிலேயே வந்து சேர்ந்தது.
பிரேம்ஜிக்கு பிறந்தநாள்.. அவரது மனைவி இந்து என்ன செஞ்சிருக்காங்க பாருங்க.. செம கொண்டாட்டம்
தேசிய விருது: செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு ஜிவி பிரகாஷ் அமைத்திருந்த இசை உச்சக்கட்ட க்ளாசிக். அதற்காக அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் கிடைக்கவில்லை. இது பலரையும் அதிருப்தியடைய செய்தது. தொடர்ந்து இசையமைத்து வந்த அவருக்கு சூரரைப் போற்று திரைப்படத்துக்காக தேசிய விருது கிடைத்தது. ஒருவழியாக பல வருடங்களுக்கு பிறகு ஜிவி பிரகாஷுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துவிட்டதாக ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
நடிப்பில் கவனம்: மேலும், அவர் நடிப்பிலும் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அந்த வகையில் த்ரிஷா இல்லனா நயன் தாரா படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ஜிவி பிரகாஷ் தொடர்ந்து பென்சில், எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு, நாச்சியார் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அவர் நடித்த படங்களிலேயே முக்கியமான படங்களாக அமைந்தது, ராஜீவ் மேனன் இயக்கத்தில் உருவான சர்வம் தாளமயம், சசி இயக்கத்தில் உருவான சிவப்பு மஞ்சள் பச்சை, பாலா இயக்கத்தில் உருவான நாச்சியார் ஆகிய படங்கள். இந்த மூன்று படங்களிலும் அவரது நடிப்பு நன்றாகவே மெருகேறியிருந்தது.
இந்தி நடிகர் கோவிந்தா மனைவியை பிரிந்தார்..முடிவுக்கு வந்த 37 ஆண்டு திருமண வாழ்க்கை!
விவாகரத்து: இதற்கிடையே அவர் பள்ளி கால தோழியான சைந்தவியை காதலித்து கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு அன்வி என்ற மகள் இருக்கிறார். சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை இப்போது விவாகரத்தில் வந்து நிற்கிறது. இரண்டு பேருமே அதற்கான அறிவிப்பை முறைப்படி வெளியிட்டிருக்கின்றனர். இந்நிலையில் ஜிவி கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.
ஜிவி பிரகாஷின் பேட்டி: அவர் அளித்த பேட்டி ஒன்றில், "ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இடம்பெற்றிருந்த தாய் தின்ற பாடலை உருவாக்க நான் ஆறு மாதங்கள் எடுத்துக்கொண்டேன். ஏனெனில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் பாடலின் வரிகள் இடம்பெற்றிருந்ததால் அவ்வளவு கால தாமதம் ஆகிவிட்டது" என்றார்.