ARTICLE AD BOX

விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி மூலமாக காமெடியை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் சிரிக்கோ உதயா. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து சினிமாவில் ஒரு சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். குறிப்பாக சந்தானம் படங்களுக்கு பல காமெடிகளையும் இவர் எழுதியுள்ளார். பல வருடங்கள் இவர் சினிமாவில் தென்படாமல் இருந்த நிலையில், சமீபத்தில் இவர் குறித்த ஒரு அதிர்ச்சி அளிக்கும் செய்தி வெளிவந்தது.
அதாவது இவருக்கு சர்க்கரை நோய் அதிகமானதால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் காலில் ரத்த ஓட்டம் இல்லாத காரணத்தால் இடது கால் முட்டிக்கு கீழ் அறுவை சிகிச்சை செய்து எடுக்கப்பட்டுள்ளது. இவருக்கு சினிமா பிரபலங்கள் பலரும் பண உதவி செய்து வருகிறார்கள். அந்தவகையில் பலருக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வரும் kpy பாலா வீடு தேடி வந்து பண உதவி செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.