ARTICLE AD BOX
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கிரேட்டர் நொய்டா பகுதியில் வசித்து வருபவர் நேஹா ரத்தோர் (23). இவர் காபூர் பகுதியில் வசித்து வரும் சூரஜ் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
இதனால் பெண்ணின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நேஹாவின் தந்தை ப்னு ரத்தோர், சகோதரர் ஹிமான்சு ரத்தோர் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே, தந்தையின் எதிர்ப்பை மீறி பெண்மணி மார்ச் 11 அன்று சூரஜை திருமணம் செய்துகொண்டார்.
இதையும் படிங்க: சேர்ந்து வாழ மறுத்த கள்ளக்காதலி பெட்ரோல் ஊற்றி எரிப்பு; மாறுவேடத்தில் வீடுபுகுந்து கள்ளக்காதலன் பகீர் செயல்.!
ஆத்திரமடைந்த நேகாவின் தந்தை, சகோதரர், நேகாவை கடத்தி வந்து படுகொலை செய்தனர். உடலை எரித்தும் ஆதாரத்தை அழிக்க முற்பட்டனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், நேகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், ப்னு, ஹிமான்சு ஆகியோரை கைது செய்து சிறையில் அடைந்தனர்.
இதையும் படிங்க: விராட் கோலி அவுட் ஆனதால் மாரடைப்பில் இறந்தாரா 14 வயது சிறுமி.?! தந்தை வெளியிட்ட தகவல்.!