அந்த காரணத்துக்காக மனைவியை துணியை அவிழ்த்து.. கணவனின் கொடூர செயல்.! 

2 hours ago
ARTICLE AD BOX

வரதட்சணை கொடுமைக்காக ஒரு பெண் நிர்வாணமாக்கி சித்தரவதை செய்யப்பட்ட சம்பவம் உத்திரபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியாபாத் பகுதியில் 3 வருடங்களுக்கு முன் ஒரு 27 வயது இளம் பெண்ணுக்கு வைர வியாபாரியுடன் திருமணம் செய்து வைக்கப்பட்டது. இந்த திருமணத்தின்போது அந்த வைர வியாபாரிக்கு வரதட்சணையாக பெண் வீட்டினர் சார்பில் 50 லட்சம் வழங்கப்பட்டது. 

அதன் பின் தற்போது 3 வருடங்கள் ஆகியும் இன்னமும் அந்த பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை நடந்து வருவதாக பெண் சமீபத்தில் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: கோவா ஹனிமூனில், நள்ளிரவு கணவன் செய்த செயல்.. போலீசிற்கு ஓடிச்சென்ற மனைவி.!

ஏதோ ஒரு கட்டத்தில் சரியாகிவிடும் என்று அவர் எவ்வளவோ பொறுத்துக் கொண்டு போயுள்ளார். ஆனால், மீண்டும் மீண்டும் அவரிடம் கார் வேண்டும் எனவும், 10 லட்சம் ரூபாய் மேலும் பணம் வேண்டும் என்றும் கொடுமைப்படுத்தி இருக்கின்றார். 

அது மட்டுமல்லாமல் அந்த பெண்ணிடம் இயற்கைக்கு மாறான உடலுறவுக்கு கட்டாயப்படுத்தி இருக்கிறார் வைர வியாபாரி. நிர்வாணமாக்கி கணவன் சித்திரவதை செய்ததாக அந்த பெண் போலீசில் புகார் கொடுத்த நிலையில், தற்போது கணவர் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: நடுரோட்டில் நொடியில் வழிப்பறி.. வேடிக்கை பார்த்த மக்கள்.. பைக்கை களவாடி ஓடிய கூட்டம்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்.!

Read Entire Article