ARTICLE AD BOX
செய்தியாளர்: சந்தான குமார்
வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்....
1.45 மணி நேரம் நிதிநிலை அறிக்கையை வாசித்தது தான் இந்த நிதிநிலை அறிக்கையின் சாதனை:
விவசாயிகளை ஏமாற்றுவதற்காக வேளாண் பட்ஜெட் என்று ஒரு நாடகத்தை திமுக அரங்கேற்றிள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை போன்றே இம்முறையும் அதே வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.. விவசாயிகளுக்கு தனி நிதிநிலை அறிக்கை அளித்தால் வளர்ந்து செழித்து வாழ்வார்கள் என விவசாயிகள் கனவு கண்டார்கள். ஆனால், அது ஒரு போலி தோற்றம் என நிரூபணம் ஆகி இருக்கிறது. 1.45 மணி நேரம் நிதிநிலை அறிக்கையை வாசித்தது தான் இந்த நிதிநிலை அறிக்கையின் சாதனை.
விவசாயிகளுக்கு நம்மை அளிக்கும் திட்டங்கள் எதுவும் இல்லை:
இந்த நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கு பயனளிக்கும் திட்டங்கள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட உணவு பதப்படுத்தும் பூங்கா போன்ற திட்டங்களை அரசு கை விட்டுள்ளது. தவறு செய்ய வசதியான திட்டங்களை விட விவசாயிகளுக்கு நம்மை அளிக்கும் திட்டங்கள் எதுவும் இந்த நிதிநிலை அறிக்கைகையில் இல்லை. அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் தான் பல திட்டங்களாக உள்ளது.
அரசு கூறியது போல், இருபோக சாகுபடி பரப்பு உயரவில்லை:
ஏற்கனவே இருந்த சாகுபடி பரப்பை 60ல் இருந்து 75 சதவீதமாக உயர்துவதாக சொன்னார்கள், ஆனால், அதை செய்யவில்லை...37.7 சதவீதம் தான் சாகுபடி செய்துள்ளார்கள். ஆண்டுதோறும் சாகுபடி பரப்பு குறைந்து தான் வருகிறது, அதிகரிக்கவில்லை. இருபோக சாகுபடி பரப்பு அரசு கூறியது போல் உயரவில்லை, உயர்த்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நெல் உற்பத்தி திறன் எக்டருக்கு 2021 - 2022 ஆம் ஆண்டில் இருந்ததை விட 2023 : 2024 ஆம் ஆண்டில் குறைந்து விட்டது.
ஊழல் செய்யும் ஒரே அரசாங்கம் ஸ்டாலின் அரசாங்கம் தான்:
பருத்தி, கரும்பு என பயிர்களின் உற்பத்தி திறனும் குறைந்துள்ளது. பயிர் வகைகள் உற்பத்தி திறனும் குறைந்துள்ளது. விவசாயிகளுக்கு உற்பத்திக்கு தரமான உற்பத்தி இடு பொருட்கள் வழங்குவதில்லை. .முதலமைச்சர் ஸ்டாலின் டெல்டாகாரன் என வீர வசனம் பேசிக்கொண்டு மேட்டூர் சென்று பாசனத்திற்கு நீர் திறந்து விட்டார். விவசாயிகளுக்கு இந்த ஆட்சியில் நன்மை கிடைக்கவில்லை, அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மையில் கூட ஊழல் செய்யும் ஒரே அரசாங்கம் ஸ்டாலின் அரசாங்கம் தான்...
அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் கிடைத்தது:
குடி மராமத்து என அற்புதமான திட்டத்தை அதிமுக கொண்டு வந்தது. அதையும் அதிமுக கை விட்டு விட்டது, இந்த நிதிநிலை அறிக்கையிலும் அதற்கான எந்த அறிவிப்பும் வரவில்லை. அத்திக்கடவு அவினாசி திட்டம் போல் ஒரு திட்டமும் இந்த ஆட்சியில் கொண்டுவரவில்லை. விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் அதிமுக ஆட்சியில் வழங்கி வந்தோம். ஆனால், தற்போது டெல்டா மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் ஷிப்ட் முறையில் தான் மின்சாரம் வழங்கப்படுகிறது...
இந்த அரசாங்கம் கடனில் மூழ்கி கொண்டு இருக்கிறது அரசு எந்த ஒரு திட்டம் அறிவித்தாலும் அதை கடன் வாங்கி தான் நிறைவேற்றும் அளவிற்கு அரசு தள்ளப்பட்டுள்ளது. கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாக திகழ்வது தான் அரசின் சாதனை” என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.