அதை செய்யாம அம்பயர்களிடம் போய் சண்டை போட்டது தப்பு தான்.. 2019 நோ-பால் குறித்து தோனி வருத்தம்

13 hours ago
ARTICLE AD BOX

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி களத்தில் அமைதியாக வித்தியாசமான முடிவுகளை கச்சிதமாக எடுப்பதில் வல்லவராக அறியப்படுகிறார். அதனால் அவரை கேப்டன் கூல் தோனி என்று பலரும் அழைப்பது வழக்கமாகும். ஆனால் அவரும் மனிதர் தான் என்பதை நிரூபிக்கும் வகையில் தோனியும் சில சமயங்களில் பொறுமையை இழந்து கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக 2019 ஐபிஎல் தொடரில் நடைபெற்ற சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதிய போட்டியை சொல்லலாம். ஜெய்பூரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் கடைசி ஓவரில் சென்னை வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது தோனி 3வது பந்தில் அவுட்டான நிலையில் 4வது பந்தை பென் ஸ்டோக்ஸ் இடுப்புக்கு மேலே வீசினார். அதை எதிர்ப்புறம் இருந்த நடுவர் நோபால் வழங்கினார்.

கோபமான தோனி:

ஆனால் பக்கவாட்டில் இருந்த நடுவர் அது நோபால் கிடையாது என்று அறிவித்தார். அதனால் எப்படி ஒரு நடுவர் கொடுத்த நோபாலை மற்றொரு நடுவர் கிடையாது என்று சொல்லலாம் என்ற வகையில் தோனி கோபமடைந்தார். அந்தக் கோபத்தால் தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்த அவர் மைதானத்திற்குள் வந்து நடுவர்களிடம் சண்டை போட்டார்.

கடைசியில் எதுவுமே மாறாத போதிலும் மிட்சேல் சான்ட்னர் சிக்ஸர் அடித்து அப்போட்டியில் சென்னையை வெற்றி பெற வைத்தது வேறு கதை. ஆனால் கூலாக இருக்கக்கூடிய தோனி அன்று எரிமலையாக பொங்கி எழுந்தது மறக்க முடியாத நிகழ்வாக அமைந்து வைரலானது. அந்த நிகழ்வை தமிழ்நாட்டில் கரூரில் ரசிகர் ஒருவர் தனது பேருந்தில் வரைந்ததை மறக்க முடியாது.

தோனி வருத்தம்:

இந்நிலையில் அந்த சமயத்தில் வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருக்காமல் நடுவர்களிடம் சண்டை போட்டது பெரிய தவறு என்று தோனி வருத்தம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நான் பொறுமையிழந்த தருணம் ஒரு ஐபிஎல் போட்டியில் நடந்துள்ளது. நான் களத்திற்கு சென்றேன். அது மிகப்பெரிய தவறு. அதை தவிர இன்னும் சில தருணங்களில் கோபம் வந்துள்ளது”

இதையும் படிங்க: போட்டிக்கு சாம்சனும் இல்ல பண்ட் சார்.. அவங்களை அதிரவிட்டு 2026 டி20 உ.கோ வாய்ப்பை பிடிங்க.. ஆகாஷ் சோப்ரா

“விளையாட்டில் உச்சகட்ட உணர்வுடன் விளையாடும் நீங்கள் ஒவ்வொரு போட்டியையும் வெல்ல விரும்புவீர்கள். அதனாலேயே கொஞ்சம் கோபம் அல்லது விரக்தியுடன் இருக்கும் போது நீங்கள் உங்களுடைய வாயை மூடிக்கொள்ள வேண்டும் என்று நான் சொல்வேன். கோபம் இருக்கும் இடத்திலிருந்து நகர்ந்து ஆழமான மூச்சு விட்டு அமைதியாக வேண்டும். அது அழுத்தத்தை அழுத்தத்தை கையாள்வது போன்றது. முடிவு அம்சத்திலிருந்து உங்களை நீங்களே வெட்டிக்கொள்ள அது உதவுகிறது. உங்கள் உணர்ச்சிகள் முடிவெடுக்கும் திறனை பாதிக்கக்கூடாது” என்று கூறினார்.

The post அதை செய்யாம அம்பயர்களிடம் போய் சண்டை போட்டது தப்பு தான்.. 2019 நோ-பால் குறித்து தோனி வருத்தம் appeared first on Cric Tamil.

Read Entire Article