”அது நான் செய்ததிலேயே மிகப்பெரிய தவறு..” - நடுவருடன் சண்டையிட்டதை நினைவு கூர்ந்த தோனி!

1 day ago
ARTICLE AD BOX
Published on: 
17 Mar 2025, 5:16 pm

மிகப்பெரிய அழுத்தமான தருணங்களிலும் அமைதியாக இருந்து வெற்றிக்கு தேவையானதை சரியாக செய்து வெற்றிகண்ட கேப்டன் மகேந்திர சிங் தோனி ரசிகர்களால் ’கேப்டன் கூல்’ என்று கொண்டாடப்படுகிறார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 3 ஐசிசி கோப்பைகளை வென்றிருக்கும் தோனி, ஐபிஎல் லீக் கிரிக்கெட்டில் சிஎஸ்கே அணிக்காக 5 கோப்பைகளை வென்றுள்ளார்.

தோனி
தோனி

இந்நிலையில் கேப்டன் கூல் என அழைக்கப்படும் தோனியிடம் அமைதியை இழந்த தருணங்கள் ஏதாவது இருக்கிறதா என்ற கேள்வி வைக்கப்பட்டது. அதற்கு பல தருணங்கள் இருப்பதாக தெரிவித்த தோனி, 2019 ஐபிஎல்லில் அம்பயருடன் சண்டையிட்டதை பெரிய தவறாக நினைவு கூர்ந்தார்.

அது மிகப்பெரிய தவறு..

2019 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்றது. அப்போது போட்டியின் இறுதி ஓவரில், சென்னை அணிக்கு வெற்றிபெற கடைசி மூன்று பந்துகளில் எட்டு ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ​​ராயல்ஸ் அணியின் பந்து வீச்சாளர் பென் ஸ்டோக்ஸ் இடுப்பு உயர ஃபுல் டாஸ் வீசினார். களத்தில் இருந்த நடுவர் ஆரம்பத்தில் அதை நோ-பால் என்று சமிக்ஞை செய்தார், ஆனால் பின்னர் முடிவை மாற்றினார், இது சிஎஸ்கே முகாமில் குழப்பத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியது.

இதனால் அமைதியை இழந்த எம்.எஸ். சிஎஸ்ஏ அணியின் முகாமிலிருந்து வெளியேறி மைதானத்திற்குள் வந்தார். அவரது செயல்களின் விளைவாக, ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக தோனிக்கு போட்டிக் கட்டணத்தில் 50% அபராதம் விதிக்கப்பட்டது.

dhoni
dhoni

சமீபத்திய ஒரு நிகழ்வில் பேசிய தோனி. மைதானத்தில் எப்போதாவது நிதானத்தை இழந்து உள்ளீர்களா என்று கேட்டபோது. இந்த சம்பவம் குறித்து மனம் திறந்து பேசினார். அப்போது பேசிய அவர், “நான் பொறுமையிழந்த தருணம் பலமுறை நடந்துள்ளது. ஒரு ஐ.பி.எல். போட்டியில் அவுட்டாகி வெளியேறி டக்அவுட்டில் இருந்தபின்பும் நான் களத்திற்கு சென்றேன். அது மிகப்பெரிய தவறு. அதை தவிர இன்னும் சில தருணங்களில் கோபம் வந்துள்ளது. விளையாட்டில் உச்சகட்ட உணர்வுடன் விளையாடும் நீங்கள் ஒவ்வொரு போட்டியையும் வெல்ல விரும்புவீர்கள். அதனாலேயே கொஞ்சம் கோபம் அல்லது விரக்தியுடன் இருக்கும்போது நீங்கள் உங்களுடைய வாயை மூடிக்கொள்ள வேண்டும் என்று நான் சொல்வேன். கோபம் இருக்கும் இடத்திலிருந்து நகர்ந்து ஆழமான மூச்சு விட்டு அமைதியாக வேண்டும். அது அழுத்தத்தை கையாள்வது போன்றது. உங்கள் உணர்ச்சிகள் முடிவெடுக்கும் திறனை பாதிக்கக்கூடாது" என்று கூறினார்.

Read Entire Article