அதிவேக 11,000* ரன்கள்..! சச்சின் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா!

4 days ago
ARTICLE AD BOX

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து இந்திய கேப்டன் ரோஹித் சர்மா புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.

9-வது சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் நடைபெறுகிறது.

இந்தியா - வங்கதேசம் மோதும் போட்டி துபையில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 228 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இதையும் படிக்க... அதிவேகமாக 200 விக்கெட்டுகள் வீழ்த்தி முகமது ஷமி சாதனை!

அதன்பின்னர் 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் பந்துவீச்சில் பவுண்டரி விளாசி 12* ரன்கள் எடுத்தபோது ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 11,000* ரன்களை எட்டிய இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்தார்.

ரோஹித் சர்மா தனது 261-வது இன்னிங்ஸில் 11,000 ரன்களை எட்டியுள்ளார். இதற்கு முன்னதாக, விராட் கோலி 222 இன்னிங்ஸில் இந்த மைல்கல்லை எட்டி முதலிடத்தில் நீடிக்கிறார். அதேவேளையில் சச்சின் டெண்டுல்கர் தனது 276-வது இன்னிங்ஸில் இந்த மைல்கல்லை எட்டியிருந்தார்.

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 11,000 ரன்கள் எடுத்தவர்

  • விராட் கோலி (இந்தியா) – 222 இன்னிங்ஸ்

  • ரோஹித் சர்மா (இந்தியா) - 261 இன்னிங்ஸ்

  • சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) – 276 இன்னிங்ஸ்

  • ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) – 286 இன்னிங்ஸ்

  • சௌரவ் கங்குலி (இந்தியா) – 288 இன்னிங்ஸ்

  • ஜாக் காலிஸ் (தென்னாப்பிரிக்கா) – 293 இன்னிங்ஸ்

இதையும் படிக்க... 6-வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள்.! வங்கதேச வீரர்கள் புதிய சாதனை!

Read Entire Article