ARTICLE AD BOX
ஈகோவை உதறித்தள்ளிவிட்டு அதிமுக தலைவர்கள் ஒன்றிய வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்து உள்ளார்.
முன்னாள் முதலமைச்சரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி அமைய வேண்டும் என்றால் பிரிந்து கிடக்கும் சக்திகள் ஒன்றியணைய வேண்டும் என்பதுதான், தமிழக மக்களின் கருத்தாகவும், அதிமுக தொண்டர்கள் கருத்தாகவும் உள்ளது. அவரவர் மனதில் உள்ள ஈகோவை உதறித் தள்ளிவிட்டு நமது தலைவர்கள் காட்டிய வழியில் செல்ல வேண்டும். ஈகோ பிடித்து உள்ள தலைவர்கள் ஈகோவை விட்டுக் கொடுத்து, கழக நலன் கருதி, ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் கருத்தாக உள்ளது என அவர் கூறினார்.

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.