ARTICLE AD BOX
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை திருத்தக்கூடிய ஒரு ஆலோசனையை செங்கோட்டையன் எடுத்துச் சொன்னார். சபாநாயகர் அப்பாவுவை அந்தப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற தீர்மானம் கொண்டு வந்தார்கள். அதற்கு சட்டப்பேரவை மரபுப்படி முதலில் இரண்டு முறை குரல் வாக்கெடுப்பும், மூன்றாவது முறையாக மட்டுமே டிவிஷன் கேட்கப்படும். அதிமுக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகரை ஏன் நீக்க வேண்டும்? என்று 20 நிமிடங்கள் நீண்ட உரையாற்றி விட்டு அவர் அமர்வதற்கு முன்னால் எங்களுக்கு டிவிஷன் வேண்டும் என்று கேட்டார்.
ஆனால், அப்போது அவையிலிருந்த துணை சபாநாயகர் முதலில் குரல் வாக்கெடுப்பு முறை என்று சொன்னார். அதற்கு அதிமுகவினர் அனைவரும் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர். எங்களுக்கு டிவிஷன் தான் வேண்டும்… குரல் வாக்கெடுப்பு வேண்டாம் என்று ஆர்.பி. உதயகுமார், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அனைத்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் எழுந்து நின்று கூச்சலிட்டார்கள்.
ஆனால், செங்கோட்டையன் மட்டும் அமைதியாக சிறிது நேரம் உட்கார்ந்து இருந்தார். கூச்சல் நின்ற பிறகு பின்புறத்தில் இருக்கக்கூடிய உறுப்பினர்களிடம் சொல்லி புரிய வைக்க முயற்சி செய்தார். ஆனால், யாரும் கேட்கவில்லை. அதாவது, முதலில் குரல் வாக்கெடுப்புத்தான் நடைபெறும். டிவிசன் எடுத்த உடனே செய்ய மாட்டார்கள். உட்காருங்கள்… மூன்றாவது முறையாகத்தான் டிவிசன் வரும். நாம் கேட்டுக் கொண்டால்தான் டிவிசன் முறை வரும் உட்காருங்கள் எனச் சொல்லிப் பார்த்தார்.
ஆனால் யாருமே செங்கோட்டையன் பேச்சைக் கேட்கவில்லை. தொடர்ந்து கூச்சல் எழுப்பி கொண்டே இருந்தார்கள். அதன் பிறகு சற்று முன்னோக்கி நகர்ந்து, அதாவது செங்கோட்டை இரண்டாவது வரிசையில் இருக்கிறார். முதல் வரிசையில் எடப்பாடி பழனிச்சாமி இருந்தார். செங்கோட்டையன், எடப்பாடி பழனிச்சாமி அருகே சென்று, அவரது காதில் இரண்டு முறை சொன்னார் ”டிவிஷன் மூன்றாம் முறையாக தான் கேட்க முடியும்’ முதல் இரண்டு முறை குரல் வாக்களிப்பது நடைபெறும் அதுதான் நடைமுறை என்று அவருக்கு புரியக்கூடிய வகையில் இரண்டு முறை சொன்னார்.
அதன் பிறகு எடப்பாடி பழனிச்சாமி உட்பட அனைத்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் அமர்ந்து விட்டார்கள். எனவே அதிமுகவில் செங்கோட்டையன் முரணோடு இருக்கிறார் என்ற பேச்சுகள் இருந்தாலும் இன்று காலையில் அவரை அழைத்து சமாதானப்படுத்தக்கூடிய படலம் நடைபெற்றது.
முதலில் செங்கோட்டையனையும், பிறகு அவர்களுடன் முரண்பட்டுக் இருக்கக்கூடிய கே.சி.கருப்பணனையும் அழைத்து தனித்தனியாக அதிமுக மூத்த நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில் அவர்களுக்குள் சமரசம் ஏற்பட்டு இருக்கிறதா? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. செங்கோட்டையன் அனைவருக்கும் சீனியர் என்ற அடிப்படையில் சட்டமன்ற விதிமுறைகளை கூறிய அனைவரையும் அமர வைத்தார்.