அதிமுக அலுவலகத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா: செங்கோட்டையன் பங்கேற்கவில்லை!

2 days ago
ARTICLE AD BOX

சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வில், முன்னாள் அமைச்சரும் அதிமுக மூத்த நிர்வாகியுமான செங்கோட்டையன் கலந்துகொள்ளவில்லை.

இதையும் படிக்க : வெற்றிக் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிப்போம்: ஜெயலலிதா பிறந்த நாளில் இபிஎஸ் சூளுரை!

தமிழகம் முழுவதும் மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளராக இருந்தவருமான ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் விழா இன்று(பிப்., 24) கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வில், அதிமுக மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். ஆனால், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி கலந்துகொள்ளவில்லை.

கோபியில் உள்ள தனது அலுவலகத்தில் ஜெயலலிதாவின் படத்துக்கு மலர்தூவி இன்று காலை செங்கோட்டையன் மரியாதை செலுத்தினார்.

முன்னதாக, சட்டப்பேரவை தேர்தலையொட்டி அதிமுக தலைமை வெளியிட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் பெயர் பட்டியல் செங்கோட்டையன் பெயர் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article