ARTICLE AD BOX
/indian-express-tamil/media/media_files/lnKhJq8CP9Sacsca3JAm.jpg)
இந்த கற்றாழை செடியை வீடுகளில் எளிதாக வளர்க்கலாம். சூரிய ஒளியில் அதிக நேரம் அலைவதால் ஏற்படும் சரும எரிச்சலைச் சரி செய்வதற்குக் கற்றாழை மிகவும் பயனுள்ள மருந்துகளில் ஒன்றாக உள்ளது. எரிச்சல் மிக்க சருமத்தில் கற்றாழை பயன்படுத்துவது குளிர்ச்சியாகவும் இதமாகவும் இருக்கும். இந்த கற்றாழை செடியை நாம் வீட்டில் உள்ளேயும் வளர்க்கலாம். கற்றாழை தரும் ஆரோக்கிய நன்மைகளைப் பெற உதவும் சிறந்த முறைகளில் ஒன்று அதன் சாற்றைக் குடிப்பதாகும். தினமும் காலையில் கற்றாழை ஜூஸ் குடிப்பதன் மூலம் கிடைக்கக் கூடிய சில நன்மைகளை இங்கே பார்க்கலாம்.
/indian-express-tamil/media/media_files/wQTPTZWoWMNQMCm1u1XN.jpg)
கற்றாழை ஜூஸில் உள்ள வைட்டமின் மற்றும் மினரல்ஸ் ஒரு நாளை உற்சாகமாகத் தொடங்கத் தேவையான ஆற்றலை இயற்கை முறையில் அளிக்கிறது. இதன் மாய்ஸ்சரைசிங் பண்புகள் உடலின் ஹைட்ரேஷனை சரியான அளவில் பராமரிக்க உதவுகின்றது. இந்த ஜூஸ் எனர்ஜி லெவலை அதிகரிக்கச் செய்கிறது மற்றும் அத்லெட்டிக் பர்ஃபாமென்ஸை மேம்படுத்துகிறது.
/indian-express-tamil/media/media_files/1BX7ep5zE11UW0Z4Pi2v.jpg)
காலை நேரம் எழுந்ததும் வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸை பருகுவது நம் செரிமான அமைப்புக்கு நன்மை அளிக்கும். கற்றாழை தாவரத்தில் காணப்படும் நொதிகளானவை கார்போ ஹைட்ரேட்ஸ் மற்றும் கொழுப்புகளை உடைக்க உதவுகின்றன. இதன் மூலம் உணவுகள் செரிமானமாவதை எளிதாக்குகின்றன. செரிமானப் பாதையை ஆரோக்கியமாக வைப்பதோடு மட்டுமல்லாமல், ஆசிட் ரிஃப்ளக்ஸ், உப்புசம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளைக் குறைக்கக் கற்றாழை ஜூஸ் உதவும்.
/indian-express-tamil/media/media_files/7cB156S9bpd1dkN4oVxf.jpg)
சருமத்தில் ஏற்படும் பல பாதிப்புகளைக் குணப்படுத்தக் கற்றாழை ஜெல்லை பயன்படுத்தலாம் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். சரும சுருக்கங்களைக் குறைக்க, சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை அதிகரிக்க கற்றாழை ஜூஸ் உதவுகிறது. மேலும் கற்றாழையின் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் முகப்பரு மற்றும் பிற சருமக் கோளாறுகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
/tamil-ie/media/media_files/uploads/2022/02/aloe-vera-gel-1.jpg)
உங்களுக்கு வாய் சம்பந்தமான பிரச்சனைகள் இருந்தால் கற்றாழை ஜூஸ் பயனுள்ளதாக இருக்கும். இதன் நோய் எதிர்ப்புத் திறன், வைரஸ் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் பல் பிரச்சனைகளுக்குச் சிகிச்சையளிப்பதில் கற்றாழை பயனுள்ளதாக இருக்கும் என்று தேசியச் சுகாதார நிறுவனம் கூறுகின்றது.