ARTICLE AD BOX
/indian-express-tamil/media/media_files/2024/11/15/RR8unsXUWlcjT1AnnUMD.jpg)
கொலஸ்ட்ரால் என்பது இரத்தத்தில் இருக்கும் மெழுகு போன்ற பொருளாகும். மேலும் இது செல் உருவாக்கம், ஹார்மோன் உற்பத்தி மற்றும் செரிமானம் ஆகியவற்றிற்கு அவசியமாகும். இது நல்ல கொழுப்பு (HDL) மற்றும் கெட்ட கொழுப்பு (LDL) ஆகிய இரண்டு வகைகளில் உள்ளது.
/indian-express-tamil/media/media_files/3jzN2jbGfJDqXl0AgW2Z.jpg)
உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால், இதய நோய், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற ஆபத்தான உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படலாம். மாறாக, உடலில் நல்ல கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால், இரத்தத்தில் இருந்து அதிகப்படியான கொழுப்பை அகற்ற உதவுகிறது மற்றும் கெட்ட கொலஸ்ட்ராலால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்கிறது.
/indian-express-tamil/media/media_files/RNaQZk0CZEKpsCRNYdXn.jpg)
அதிக கொலஸ்ட்ரால் ஆனது தமனிகளில் கொழுப்பு படிவுகள் குவிந்து இரத்த ஓட்டத்தை குறைக்கிறது. காலப்போக்கில், இது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற உயிருக்கு ஆபத்தான இதய சிக்கல்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. இது தவிர தோலிலும் சில அறிகுறிகள் காணப்படுகின்றன.
/indian-express-tamil/media/media_files/x0VkfYDZOssCP3UjNaxt.jpg)
சாந்தோமாஸ் : சாந்தோமாஸ் என்பது தோலுக்கு அடியில் சேகரிக்கப்படும் கொழுப்பு படிவுகள் ஆகும். இவை முழங்கை, முழங்கால், கைகள் அல்லது பட்டாக்ஸ் போன்ற பகுதிகளில் காணப்படுகிறது.
/indian-express-tamil/media/media_files/tJ4aABL4EzND8oovqY1D.jpg)
லைவ்டோ ரெட்டிகுலரிஸ்: தோல் நீல-சிவப்பு நிறத்தில் நெட் போன்ற பேட்டர்ன் உருவாகும். இது பொதுவாக தொடைகள், பாதங்கள், கால்விரல்கள், கீழ் கால்கள் மற்றும் பட்டாக்ஸ் ஆகியவற்றில் தெரியும்.
/indian-express-tamil/media/media_files/X9C110cnWpZnsg05XBnM.jpg)
சொரியாசிஸ்: வீக்கம் அதிகரிக்கும் போது, சிவப்பு, செதில் போன்ற ஸ்கின் பேட்சஸ் தோன்றும். இவை இதய நோய் அபாயத்தை அதிகரிக்கின்றன.
/tamil-ie/media/media_files/uploads/2022/08/cholesterol_759_ie.jpg)
சேச்சுரேட்டட் ஃபாட், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சர்க்கரை உணவுகள் ஆகியவற்றை சாப்பிடுவதை குறைக்கவும். மேலும், உங்கள் உணவில் நார்ச்சத்து, பழங்கள், காய்கறிகள், நட்ஸ் மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகளை உணவில் சேர்க்கவும். கொலஸ்ட்ரால் அளவு மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் அல்லது வலிமை பயிற்சி போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவும்.